நான் திரும்ப வந்துவிட்டேன்…!!! கதவை திறங்க…!!

நான் திரும்ப வந்துவிட்டேன்...!!! கதவை திறங்க...!!

புளோரிடா மாநிலத்தில் செல்லப் பிராணியாக வளர்த்து வந்த நாய் ஒன்று திடீரென காணாமல் போனது.

குடும்பத்தினர் எவ்வளவு தேடியும் அதை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் இருந்தனர்.

இப்படியே ஒரு வாரம் ஆன நிலையில்
கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அதிகாலை 2.30 மணி அளவில் திடீரென வீட்டின் அழைப்பு மணி அடித்தது.

இதனால் தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர் அனைவரும் கண்விழித்துக் கொண்டனர்.

கதவை திறந்த போது அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

ஆம்.. வாசலில் நாய் வாலாட்டியபடி காத்திருந்தது.

நாய் தானாக வீடு திரும்பியதை எண்ணி குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

Follow us on : click here ⬇️