லிட்டில் இந்தியாவில் சட்டவிரோதமாக விற்பனையான இ-சிகரெட் பறிமுதல்….!!

லிட்டில் இந்தியாவில் சட்டவிரோதமாக விற்பனையான இ-சிகரெட் பறிமுதல்....!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் சிலிகி சாலையில் உள்ள ரியல் மார்ட்டின் புகையிலை விற்பனை உரிமத்தை சுகாதார அறிவியல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

புகையிலை விற்பனை செய்ய உரிமம் பெற்ற அந்த கடையில் சட்டவிரோதமாக இ-சிகரெட்டுகள் பதுக்கி விற்பனை செய்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை ஆகஸ்ட் 27 அன்று சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

மேலும், கடையில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளும் இருந்ததாக ஆணையம் தெரிவித்தது.

ரியல் மார்ட் கன்வீனியன்ஸ் ஸ்டோரின் உரிமையாளருக்கு சொந்தமான கேலாங்கில் உள்ள மற்றொரு தொலைபேசி கடையில் இருந்தும் இ-சிகரெட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

தெம்பனீசில்  உள்ள அவரது வீட்டிலும் இ-சிகரெட்டுகள் பதிக்க வைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

மூன்று இடங்களில் 120க்கும் மேற்பட்ட இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக கடை உரிமையாளர் மற்றும் இரண்டு ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இ-சிகரெட் வைத்திருப்பது சட்டவிரோதமானது.

முதல்முறையாக இ-சிகரெட் விற்பனை மற்றும் விநியோகம் செய்யும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10,000 வெள்ளி அபராதம் அல்லது ஆறு மாத சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இரண்டாவது அல்லது அதற்கு அடுத்தடுத்த குற்றங்களுக்கு 20,000 வெள்ளி அபராதம் அல்லது 12 மாத சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும் குற்றவாளிக்கு 2,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.

 

Follow us on : click here 👇👇

Instagram id : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook id : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram id : https://t.me/tamilansg