சிங்கப்பூர் உணவு அமைப்பு வியட்நாமிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு டன்னுக்கும் அதிகமான உணவை பறிமுதல் செய்துள்ளது.
அமைப்பு கைப்பற்றி இருக்கும் ஆகா அதிகமான உணவு அது.
ஸ்னாக்கோவில் உள்ள கிடங்கில் அது கைப்பற்றப்பட்டது.
பதப்படுத்தப்பட்ட மற்றும் பதப்படுத்தப்படாத இறைச்சி மற்றும் கடல் உணவையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தன.
உறைய வைக்கப்பட்ட தவளையும்,கோழியும் அதில் அடங்கும்.
அனுமதி பெறப்படாத முறையான உரிமம் இல்லாத இடங்களிலிருந்து அவை சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து மதுபானங்களும் கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு விற்பனைக்காக சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுவது நிரூபிக்கப்பட்டால் 50,000 வெள்ளி வரையிலான அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.