சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் பறிமுதல்!!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் உணவு அமைப்பு மற்றும் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையமும் இணைந்து இம்மாதம் ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதில் தக்காளி, வெண்டைக்காய், பாயாம் எனும் ஒரு வகை கீரை போன்ற உணவுப் பொருட்கள் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டு கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பொருட்கள் அனைத்தும் சிங்கப்பூர் உணவு ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் சிங்கப்பூரில் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் சில்லறை விற்பனையாளர்களுக்கும் உணவுப் பொருட்களை நேரடியாக வழங்கும் 2 லாரிகளில் இருந்தன.
இந்த செய்தியை சிங்கப்பூர் உணவு அமைப்பு தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் குறித்த உரிய ஆவணங்கள் இருக்க வைத்திருக்க வேண்டும். மேலும் முறையான நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என்றும் கூறியது.
உரிமம் பெற்ற இறக்குமதியாளர்கள் மட்டுமே சிங்கப்பூரில் பழங்கள் மற்றும் காய்கறிகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவர்.மேலும் முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமான முறையில் உணவுப் பொருட்களை கடத்தும் நபர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் உள்ளிட்டவை விதிக்க வாய்ப்புண்டு.
Follow us on : click here