சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்தில் குடிபோதையில் பயணித்தால்.....
சிங்கப்பூரில் கடந்த மூன்று ஆண்டுகளில் பொது போக்குவரத்தில் எத்தனை பயணிகள் குடிபோதையில் இருந்துள்ளனர்? அவர்களுக்கு எதிராக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் Gerald Giam கேள்வி எழுப்பினார்.
அதற்கு போக்குவரத்து அமைச்சர் சீ ஹோங் டாட் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
மதுபோதையில் இருப்பவர்கள் அல்லது பயணம் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
பேருந்து அல்லது ரயிலில் மற்ற பயணிகளுக்கு குடிபோதையில் தொல்லைக் கொடுப்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
அவர்கள் ஒத்துழைக்க மறுத்தால் காவல்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் சீ நினைவூட்டினார்.
மேலும் அவர்களுக்கு குற்ற அறிக்கையை போக்குவரத்து நிறுவனங்கள் விடுப்பதோடு அபராதமும் விதிக்கலாம் என்று கூறினார்.
அது போன்ற சம்பவங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் மாதத்திற்கு சராசரியாக 34 சம்பவங்கள் நடந்துள்ளன.ஆனால் சம்பவங்களில் தொடர்புடையவர்களில் பலர் ஒத்துழைப்பு அளித்ததால் சட்ட நடவடிக்கை அவர்களுக்கு எதிராக எடுக்கப்படவில்லை என்று கூறினார்.
மேலும் போக்குவரத்து ஊழியர்கள் குடிபோதையில் உள்ளவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.
Follow us on : click here