ஆரோக்கியத்துடன் வாழ்ந்தால் நீண்ட ஆயுளோடு வாழலாம்..!!
ஒவ்வொருவரும் நீண்ட காலம் வாழ முயற்சிப்பதை விட வயதான காலத்தில் ஆரோக்கியமாக இருக்க முயற்சிப்பதே சிறந்த வழி என்று முதுமை ஆராய்ச்சி வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கர்கள், சராசரியாக, சுமார் 76 வயது வரை வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
ஆனால் அவர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ளும் பட்சத்தில் 64 வயதிற்குள் குறையும்.
எனவே வயது தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொள்ளும் பெரும்பாலான வல்லுநர்கள் உடல் நலத்தை குறிவைக்க முயற்சிக்கின்றனர்.
ஒருவர் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தால் நீண்ட ஆயுளோடு வாழலாம் என்பது அவர்களின் கருத்தாக முன்வைக்கப்பட்டது.
முதுமை பற்றிய ஆராய்ச்சிக்கான பக் இன்ஸ்டிட்யூட்டின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் எரிக் வெர்டின்,பெரும்பாலான மக்கள் இயல்பாகவே 90, 95 வயது வரை நல்ல ஆரோக்கியத்துடன் வாழ முடியும் என்று கூறுகிறார்.
ஆரோக்கியத்தை நீட்டிக்க வல்லுநர்கள் கூறும் இரண்டு முக்கிய வழிகள்:
* உடற்பயிற்சி
* ஆரோக்கியமான உணவு
இந்த இரண்டு வழிமுறைகளை முறையாக பின்பற்றினாலே நீண்ட ஆயுளோடு வாழலாம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.
இரண்டாவதாக அவர்கள் மருந்து உட்கொள்வதன் மூலம் ஒருவருக்கு ஏற்படும் நோயின் தொடக்கத்தை தாமதப்படுத்தும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதனால் புற்றுநோய், நீரிழிவு நோய், இதய நோய், பக்கவாதம் மற்றும் ஞாபக மறதி உள்ளிட்ட வயது தொடர்பான அனைத்து நாள்பட்ட நோய்களையும் ஒத்திவைக்கலாம்.
ஜப்பான் மற்றும் சிங்கப்பூரில் மேற்கொண்ட தரவுகளின் படி,42 சதவீதம் பேர் 80 வயதிற்கு முன் வயது தொடர்பான நாட்பட்ட நோயை அனுபவிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
சில சோதனை அணுகுமுறைகளை பயன்படுத்தி முதுமை அடைவதை குறைக்க முடியுமா என்பதை ஆராய்ச்சி நமக்குச் சொல்ல பல ஆண்டுகள் ஆகும்.
எனவே மக்கள் ஆரோக்கியமுடன் வாழ்ந்தாலே நீண்ட ஆயுளோடு வாழலாம் என்று முதுமை ஆராய்ச்சி வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Follow us on : click here