இப்படி உள்ளவர்கள் இருந்தால் மற்றவர்களுக்கு உதவ வேண்டாம் என்ற நிலை வந்துவிடும் போல……

சிங்கப்பூரில் இவ்வாண்டு ஜனவரியில் இருந்து `போலி நண்பர்´மோசடி கும்பலிடம் 4,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் $15.7 மில்லியன் தொகையை இழந்துள்ளதாக சிங்கப்பூர் காவல்படை ஆகஸ்ட் 30-ஆம் தேதி தெரிவித்தது.

மோசடி கும்பல் பாதிக்கப்பட்டவர்களை குறுஞ்செய்தி அல்லது வாட்ஸாப் மூலமாகவோ தொடர்பு கொண்டு தெரிந்தவர்கள் போல் உரையாடி உதவி செய்யுமாறு கேட்பார்கள். தெரியாத எண்களில் இருந்து அல்லது எண்ணிற்கு முன் +65 இருந்தும் தொடர்பு கொள்வார்கள்.

மோசடி காரர் பாதிக்கப்பட்டவரை தொடர்பு கொண்டதும் தன்னை யாரென்று கண்டு பிடியுங்கள் என்று சொல்வார்.

பாதிக்கப்பட்டவர் தங்களுக்கு தெரிந்தவர்களின் பெயரை கூறும்போது அவர்களில் ஒருவரின் பெயரை அடையாளமாக மோசடி காரர் எடுத்து கொள்வார்

பின் கஷ்டத்தில் இருப்பதாகவும் வங்கி பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியவில்லை என்றும் நிதி சிக்கலில் இருப்பதாகவும் கூறுவர்.

அதன்பின் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து பணத்தை ஏமாற்றி விடுவார்கள்.

தங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் உதவி கேட்டால் முதலில் அவர் உங்களுக்கு தெரிந்தவரா என்பதை உறுதி செய்யுங்கள் என்று பொதுமக்களிடம் காவல்துறை கேட்டுக் கொண்டது.

அதோடு Scamshield செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தியது

.