“சிங்கப்பூர் இளைஞர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்”- திரு வோங்!!

“சிங்கப்பூர் இளைஞர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்”- திரு வோங்!!

சிங்கப்பூர்: இளைஞர்கள் சமூகத்திற்குத் தங்களின் பங்களிப்பை கொடுப்பதற்கு அதிக வாய்ப்புகளை அரசாங்கம் உருவாக்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

இளைஞர் படையின் 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில், திரு.வோங் பேசினார்.

நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க மேலும் பல வாய்ப்புகள் வழங்கப்படும் என்றார்.

திரு.வோங் அவர்கள் கலாச்சாரம், சமூக,இளையர் துறை அமைச்சராக 2014 இல் பதவி வகித்தபோது இளைஞர் படையை உருவாக்கினார்.

ஆரம்பத் தொடக்கத்தில் அந்த அமைப்பில் 90 தொண்டூழியர்கள் இருந்ததாகவும் தற்போது 30,000க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

அவர்கள் சுமார் 20க்கும் மேற்பட்ட திட்டங்களை வழங்கி வருவதாகவும் கூறினார்.
இனிவரும் காலங்களில் இளம் சிங்கப்பூரர்கள் தொண்டூழிய சேவைகளில் ஈடுபடுவதை அமைப்பானது எளிமையாக்க முயல்கிறது.

மேலும் இளைஞர்கள் சிங்கப்பூர் மட்டுமன்றி பிற நாடுகளுக்கும் தொண்டூழிய சேவைகள் புரியுமாறு இளைஞர்களை திரு.வோங் ஊக்கப்படுத்தினார்.

இது சிங்கப்பூருக்கு அப்பால் ஒரு வலுவான தொண்டூழிய அமைப்பை உருவாக்க உதவும் என்றார்.

இதுகுறித்து திருவோங் தனது பேஸ்புக் பக்கத்தில்,
நாட்டில் வாழும் இளைஞர்களின் ஆற்றல், ஆர்வம் மற்றும் இலட்சியவாதத்தால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், தொண்டூழிய சேவை புரிவதால் சிங்கப்பூரை மேன்மையடைய செய்ய முடியும் என்றும் இதனால் ஒரு வலுவான மற்றும் ஒன்றுபட்ட நாட்டை உருவாக்கலாம் என்று கூறினார்.மேலும் அவர் இளைஞர் படைக்கு தனது பத்தாவது ஆண்டு தின நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.