புளோரிடாவை நெருங்கும் மில்டன் சூறாவளி!! அச்சத்தில் மக்கள்!! பாதுகாப்பான இடங்களுக்கு விலங்குகள் மாற்றம்!!

புளோரிடாவை நெருங்கும் மில்டன் சூறாவளி!! அச்சத்தில் மக்கள்!! பாதுகாப்பான இடங்களுக்கு விலங்குகள் மாற்றம்!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை மில்டன் சூறாவளி தாக்கும் என அஞ்சப்படுகிறது.இதற்குமுன் செப்டம்பர் 26-ஆம் தேதி ஹெலீன் சூறாவளி புளோரிடா மாநிலத்தை தாக்கியது. ஆனால் அதைவிட மில்டன் சூறாவளி கடுமையாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்கம் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.

தம்பா நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதில் மும்முரமாக உள்ளது.

பூங்காவில் சூறாவளியை தாங்கக்கூடிய சில கட்டிடங்கள் இருப்பதாக விலங்கு நடவடிக்கை இயக்குநர் கூறினார்.

அந்த கட்டிடங்களுக்கு விலங்குகள் பாதுகாப்பாக மாற்றப்படும் என்று கூறினார்.

ஆனால் விலங்குகளுக்கு மன உளைச்சல் ஏற்படமால் பணியை செய்வது சவாலானது.

மேலும் பொதுமக்கள் புளோரிடாவை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுகின்றனர்.