அமெரிக்காவின் ஹெலீன் சூறாவளியால் 56 பேர் மரணம்…!!!

அமெரிக்காவின் ஹெலீன் சூறாவளியால் 56 பேர் மரணம்...!!!

அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை சூறையாடிய ஹெலீன் புயல் தற்போது வெப்ப மண்டல புயலாக மாறியுள்ளது.

ஜார்ஜியா ,சௌத் கரோலைனா, புளோரிடா, டென்னசி மற்றும் வெர்ஜீனியா ஆகிய பகுதிகள் புயலால் கடும் சேதமடைந்துள்ளது.

அமெரிக்காவில் ஹெலீன் புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

புயல் காரணமாக தென்கிழக்கில் சுமார் 3.5 மில்லியன் மக்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளனர்.

மேலும் அப்பகுதியில் தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதில் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு குழுவினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புயல் வலுவிழந்த நிலையிலும் கனமழை பெய்து வருகிறது.

டென்னசி மாகாணத்தின் கிழக்குப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சூறாவளி அங்குள்ள வீடுகளை அழித்தது.

வெட்டப்பட்ட மரங்கள் மற்றும் கட்டிடங்கள் குப்பைக் குவியல்களாக மாறின.

இதனால் ஏற்பட்ட சேதம் $110 மில்லியனுக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.