வெடிகுண்டு மிரட்டலால் வெளியேற்றப்பட்ட நூற்றுக்கணக்கானோர்……

அக்டோபர் 14ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு, தொலைபேசி அழைப்பு மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதைத் தொடர்ந்து ஜோகூர் பாருவின் Midvalley Southkey-ல் உள்ள The Mall-ல் இருந்து நூற்றுக்கணக்கானவர்களை வெளியேற்றப்பட்டனர்.

தீயணைப்புத்துறையினரும், காவல்துறையினரும் வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை மேற்கொண்டு, அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தபட்டது.

தீவிர சோதனையின் முடிவில் அங்கு அச்சுறுத்தலுக்கான எந்த ஒரு தடயமும் இல்லை என்று தெரிவித்தது.

ஜோகூர் மாவட்ட காவல்துறை தலைவர் அப்பகுதி பாதுகாப்பாக உள்ளது என்று உறுதி அளித்தார். அதன் பின்னரே கடைக்காரர்கள், ஊழியர்கள் மீண்டும் மாலுக்குள் சென்றனர்.

இந்த மால் ஹோட்டலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளுக்கு பிரபலமான ஷாப்பிங் இடமாகவும் செயல்படுகிறது.

ஜோகூரில் உள்ள சிங்கப்பூர் துணை தூதரகம், பாதிக்கப்பட்ட அங்குள்ள சிங்கப்பூரர்களை எச்சரிக்கையாக செயல்படும்படியும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின் படி செயல்படுமாறும் அறிவுறுத்தியது.