EC builders கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் பணிபுரிந்துக் கொண்டுருந்த போது உயர்த்திலிருந்து தவறி விழுந்துள்ளார். உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் ஊழியருக்கு தலையில் அடிபட்டு மூளையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்ததுள்ளது. இதனால், இந்நிறுவனத்தின் மீது மனித வள அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது.உயரத்திலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு முறையான பயிற்சி தரவில்லை என்றும் மேற்பார்வை கொடுக்கப்பட்டிருக்கவில்லை என மனித வள அமைப்பு கூறியுள்ளது.
இதனால் ஊழியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறிய கட்டுமான நிறுவனத்திற்கு 170 ஆயிரம் மில்லி அதாவது இந்தியா மதிப்பில் பதினான்கு மில்லியன் அபதாரம் மனித வள அமைச்சகம் விதித்துள்ளது.