சைனீஸ் கார்டன் MRT – க்கு அருகில் வரவுள்ளது பிரமாண்டமான அறிவியல் மையம்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் , பிரமாண்டமான தோற்றத்தில் புதிதாக வரவுள்ளது கண்கவர் அறிவியல் மையம். Jurong lake மாவட்டத்தில் அமைந்திருக்கும் இயற்கை வளம் பொருந்திய சைனீஸ் கார்டன் MRT – க்கு அருகில் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது ஏற்கனவே இருக்கும் சிங்கப்பூர் அறிவியல் மையத்தின் இடமாற்றம் எனவும் புதிதாக வரவுள்ள அறிவியல் மையம் அதைவிட அதிக நிலப்பரப்பில் விசாலமாக வடிவமைக்கப்படும் எனவும் அறிவியல் மைய வாரியம் (SCB) கூறியுள்ளது.

மேலும் இதன் கட்டுமானப்பணி 2024 ல் தொடங்கி 2027 லில் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் கல்வி அமைச்சகம்(MOE) -இன் அறிக்கைப் படி , இந்த புதிய அறிவியல் மையம் அமைத்தல் திட்டத்தின் கீழ் பல்வேறு அறிவியல் ரீதியான மாற்றங்கள் , செய்திகள் மற்றும் அறிவியல் பரிணாம வளர்ச்சி அனைத்தையும் குழந்தைகள் அறிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது இருக்கும் அறிவியல் மையத்தின் சிறப்பம்சமாக கருதப்படும் Fire Tornado நிகழ்ச்சி புதுவித தோற்றத்துடன் மக்கள் கண்டுகளிக்கச் செய்யும் வகையில் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.