அனைத்து வசதிகளுடன் அதிரடியாக களமிறங்கும் HTC Wildfire E7 plus ஸ்மார்ட் போன்…!!!!

அனைத்து வசதிகளுடன் அதிரடியாக களமிறங்கும் HTC Wildfire E7 plus ஸ்மார்ட் போன்...!!!!

இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப அனைத்து வசதிகளும் இடம்பெற்றுள்ள வகையில் HTC நிறுவனம் விரைவில் HTC Wildfire E7 Plus என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது.இந்த ஸ்மார்ட்போன் முதலில் UAE-யிலும் பின்னர் மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் HTC Wildfire E7 Plus மொபைல் போனில் என்னென்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்ற விவரங்கள் வெளிவந்துள்ளது.அது குறித்த தகவல்களை இங்கே காணலாம்.

HTC Wildfire E7 Plus போனின் சிறப்பம்சங்கள்:

HTC Wildfire E7 Plus ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் முழு HD Plus இன்செல் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.மேலும் இதன் டிஸ்ப்ளே 1080 O 2460 பிக்சல்கள், 600 nits பிரகாசம், 120Hz ரெஃப்ரஷ் ரேட் போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது.

HTC Wildfire E7 Plus ஸ்மார்ட்போன் MediaTek Helio G99 சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்கும். இந்த HTC போன் Android 14 இயக்க முறைமையுடன் வரும்.இருப்பினும், இந்த மொபைல் போன் Android புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும்.

HTC Wildfire E7 Plus ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது.இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர் வசதிகளும் உள்ளன

HTC Wildfire E7 Plus ஸ்மார்ட்போன் 8GB RAM மற்றும் 256GB மெமரியுடன் வெளியிடப்படும். கூடுதலாக, இந்த அற்புதமான ஸ்மார்ட் போனில் எக்ஸ்டர்னல் மெமரி வசதியும் உள்ளது. மேலும் இதில் மெமரி கார்டைப் பயன்படுத்த ஏதுவாக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருப்பது குறிப்பிடத்தக்கது.

HTC Wildfire E7 Plus ஸ்மார்ட்போன் 64MP மெயின் கேமரா + 2MP இரண்டாம் நிலை கேமரா கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வரும். இதில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 16MP கேமராவும் உள்ளது.இது தவிர, இந்த போனில் LED ஃபிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.

இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்கள் சார்ஜ் செய்வது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.HTC Wildfire E7 Plus 5000mAh பேட்டரியுடன் வெளியிடப்படும்.

அதாவது இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.
இது நாள் முழுவதும் பேட்டரி பேக்கப்பை வழங்கும்.

இது இரட்டை நானோ சிம் வசதியுடன் வெளியிடப்பட உள்ளது.இந்த போனின் மொத்த எடை 212 கிராம் என்று கூறப்படுகிறது.

மேலும் இதில் அட்டகாசமான டூயல்-பேண்ட் Wi-Fi, ப்ளூடூத் 5.0, GPS, மற்றும் GLONASS உள்ளிட்ட பல்வேறு இணைப்பு விருப்பங்களுடன் வருகிறது.

இந்த புதிய HTC போன் பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.இந்த போன் அனைத்து சிறந்த அம்சங்களுடனும் வருவதால் இது நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.