Latest Singapore News

எப்படி சிங்கப்பூரில் Painting Skilled Test அடிப்பது? எவ்வளவு செலவாகும்? அதற்கு எங்கே அப்ளைச் செய்ய வேண்டும்?

எப்படி சிங்கப்பூரில் Painting Skilled Test அடிப்பது? எவ்வளவு செலவாகும்? அதற்கு எங்கே அப்ளைச் செய்ய வேண்டும்? என்பதைப் பற்றி விவரமாக தெரிந்து கொள்வோம்.

எவ்வளவு செலவாகும்?

சிங்கப்பூரில் Painting Skilled Test அடிப்பதற்கு $1400 டாலரிலிருந்து $1700 டாலர் வரை செலவாகும்.

Painting skilled Test :

மூன்று நாட்கள் நடைபெறும். முதல் இரண்டு நாட்கள் Training. மற்றொரு நாளில் Theory மற்றும் Practical நடத்தப்படும்.

நீங்கள் டெஸ்ட் அடிப்பதற்கு அப்ளைச் செய்யும் இடத்தில் Theory க்காக 25 வினாக்கள் அடங்கிய வினாத்தாளை வழங்குவார்கள். அதில் இருக்கும் வினாக்கள் தான் Theory Test இல் கேட்கப்படும்.முன்னதாக கொடுத்த Theory வினாத்தாளில் கேட்கப்பட்ட வினாக்கள் இடம்பெற்றிருக்கும்.ஆனால்,வினாக்கள் மாறி மாறி இருக்கும்.நீங்கள் 25 வினாக்களில் 13 வினாக்களுக்கு சரியாகப் பதில் அளித்து இருந்தால் Pass ஆகி விடுவீர்கள்.

Practical க்கு கொடுக்கப்படும் மணி நேரம் ஐந்து(5) மணி நேரம்.அதனை இரண்டு பகுதியாக பிரிப்பார்கள். முதல் மூன்று மணி நேரம் Paint பண்ணுவீர்கள்.மூன்று மணி நேரம் கழித்து இடைவெளி கொடுப்பார்கள்.இடைவெளி முடிந்தவுடன் மீண்டும் நீங்கள் Paint பண்ண தொடங்க வேண்டும். அவர்கள் கொடுத்த மணி நேரத்துக்குள் Practical யை முடிக்க வேண்டும். அதில் நீங்கள் பயன்படுத்திய Masking டேப்பை மறந்துவிடாமல் எடுத்து விடுங்கள்.

அதனை நீங்கள் அகற்ற வில்லையென்றால், உங்களை உடனடியாக Fail என்று கூறி விடுவார்கள்.

Training நடைபெறும் நாளிலேயே Theory மற்றும் Practial -லில் என்ன செய்ய வேண்டும்?அதைப்பற்றிய முழு விவரங்களையும் தெளிவாக கூறுவார்கள்.

Practical Test அன்று Masking Tape ஒட்டுவது மிக கஷ்டமாக இருக்கும். இது நமது Subscriber – இன் கருத்து.

எதற்காக Masking டேப் பயன்படுத்தப்படுகிறது?

குறிப்பிட்ட அளவுக்குள் பெயிண்ட் பண்ண வேண்டும் என்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.

நீங்கள் மூன்று Coating அடிக்க வேண்டும்.நீங்கள் Practical – லில் Oil Painting, Water Painting பண்ண வேண்டும். அதோடு, ஒரு போர்டில் Varnish வும் அடிக்க வேண்டும்.

எங்கே அப்ளைச் செய்யலாம்?

Expo பக்கத்தில் உள்ள BBR Building Painting Skilled Test நடத்தப்படுகிறது. Painting Skilled Test சிங்கப்பூரிலேயே இங்கு மட்டும்தான் நடக்கிறது.

இங்கு Painting Skilled Test மட்டுமல்லாமல் இரண்டு Inter blocking Test வும் நடக்கிறது.

நீங்கள் Practical Test க்கு செல்லும்போது Ip ல 1,2,3 என்ற நம்பர்களில் வரிசை எண் உங்களுக்கு கொடுக்கப்படும்.அதில் இருக்கும் நம்பரில் தான் நீங்கள் பெயிண்ட் பண்ண வேண்டும்.

எப்போது ரிசல்ட் வரும்?

நீங்கள் Test அடித்துமுடித்த பிறகு,30 நாட்களுக்குள் ரிசல்ட் வந்துவிடும்.

குறிப்பு : பெயிண்ட் செய்து முடித்தவுடன் Masking டேப்பை உடனடியாக அகற்றி விடுங்கள். மறந்து விடாதீர்கள்.