Latest Sports News Online

சிங்கப்பூரில் ரூம் மற்றும் வீடு வாடகைக்கு தேடுவது எப்படி!

சிங்கப்பூருக்கு வேலை செய்வதற்காக வருபவர்களுக்கு கம்பெனி தங்கும் இடம் வழங்குவார்களா? அல்லது தங்கும் இடத்தை நாம் தேட வேண்டுமா? டூரிஸ்ட் விசாவில் வருபவர்கள் எப்படி வாடகைக்கு வீடு தேடலாம்? என்பதைப் பற்றிய முழு விவரத்தையும் விரிவாகக் காண்போம்.

சிங்கப்பூர் வந்ததிற்குப் பிறகு, தங்குமிடம் மிக முக்கியமானது. வொர்க் பெர்மிட்டில் வருபவர்களும், PCM பெர்மிட்டில் வருபவர்களும் தங்குமிடத்திற்காக கவலைப்பட வேண்டாம். இந்த பெர்மிட் மூலம் வருபவர்களுக்கு அவர்கள் வேலைச் செய்யப்போகிற கம்பெனி சார்பாக வழங்குவார்கள். அவர்கள் சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்னே, அவர்களுக்கென ரூம்களை ஒதுக்கி வைத்து விடுவார்கள். அவர்கள் சிங்கப்பூர் வந்தவுடன் ரூம்களுக்கே நேரடியாக அழைத்துச் செல்வார்கள். ஆனால் இந்த பெர்மிட்கள் மூலம் வருபவர்கள் கவலைப்பட தேவையில்லை.

S-Pass மூலம் வருபவர்கள் வாடகைக்கு ரூம்கள் எடுத்து தங்க வேண்டும். சிங்கப்பூர் ரூல்ஸ் படி S-Pass மூலம் வருபவர்கள் வெளியில் இருக்கும் ரூம்களை வாடகைக்கு எடுத்து தான் தங்க வேண்டும்.

Student விசா மேலும் வருபவர்கள் இவர்கள் படிக்கப் போகிற கல்லூரி விடுதியில் தங்கி கொள்ளலாம். ஆனால் ஒரு சிலர் வெளியில் ரூம்களை வாடகைக்கு எடுத்து தங்குவார்கள். E-Pass போன்ற மற்ற பாஸ்களின் மூலம் வருபவர்கள் வெளியே ரூம்களை வாடகைக்கு எடுத்து தங்க வேண்டும்.

முக்கியமாக டூரிஸ்ட் விசாவில் மூலமாக வருபவர்கள் கண்டிப்பாக வெளியில் ரூம்களை வாடகைக்கு எடுத்து தங்க வேண்டும்.

சிங்கப்பூரில் ரூம்களை எப்படி தேடுவது என்பதைத் தெரிந்துக் கொள்வோம். ஒரு சிலர் ஹோட்டல் ரூம்களில் தங்கிக் கொள்ளலாம் என்று நினைப்பார்கள். ஆனால் ஹோட்டல் ரூம்களின் விலை அதிகமாக இருக்கும்.

இதனால் ரூம்களை வெளியில் வாடகைக்கு தேட வேண்டும். சிங்கப்பூர் சிட்டிசன்கள் இரண்டு அறை,மூன்று அறை, நான்கு அறை கொண்ட வீடுகளை வாங்கி இருப்பார்கள். அதில் அவர்கள் ஒரு ரூமில் தங்கிக் கொண்டு, மற்றொரு ரூமை வாடகைக்கு விடுவார்கள். சிலர் இரு வீடு வைத்திருந்தால், ஒரு வீட்டில் அவர்கள் தங்கி கொண்டு, மற்றொரு வீட்டை வாடகைக்கு விடுவார்கள். சிங்கப்பூரில் இதே போல் பல வகையான வீடுகள் வாடகைக்கு கிடைக்கும்.

இப்போது அவற்றுக்கான எவ்வளவு வாடகை என்பதை தெரிந்து கொள்வோம். ஒரு மாதத்திற்கான ரூம் வாடகை கிட்டத்தட்ட 750 முதல் 900 டாலர்ஸ்கள் வரை இருக்கக்கூடும். இதற்கு இடைப்பட்ட அளவில் தான் இருக்கும். ஒரு மாதத்திற்கான வீட்டு வாடகை, கிட்டத்தட்ட ஒரு மாத ரூம் வாடகையில் இரண்டு அல்லது மூன்று மடங்காக இருக்கும். வீட்டில் எத்தனை ரூம்கள் இருக்கிறதோ அதை பொருத்து மாறுபடும்.

சிங்கப்பூரில் ரூம்களைத் தேடுவதற்கான செயலிகள்(Apps) இருக்கின்றது. முதலாவதாக,Ohmyhome செயலியைப் பயன்படுத்தி சிங்கப்பூரில் ரூம்களை வாடகைக்குத் தேடலாம்.

அடுத்தது,99.co Singapore என்ற செயலி மூலமாகவும் ரூம்களை வாடகைக்குத் தேடலாம்.

அடுத்ததாக, உலகெங்கும் உள்ளவர்கள் பயன்படுத்தும் Couchsurfing Travel app. இதன் மூலமாகவும் ரூம்களைத் வாடகைக்கு தேடலாம். முன்பணம் செலுத்த வேண்டும் என்று கூறினால், நேரடியாக ரூம்களைப் பார்த்து பிறகு, முன்பணம் செலுத்துங்கள். முன்கூட்டியே பணத்தைச் செலுத்தி ஏமாந்து விடாதீர்கள்.

செயலி மூலமாக வாடகைக்கு வீடு அல்லது ரூம் கிடைக்கவில்லை என்றால், சிங்கப்பூரில் இருக்கும் தமிழர்களின் கடைக்குச் சென்று அங்கு இருப்பவர்களிடம் கேட்கலாம். அங்கு இருக்கும் காலண்டர்களில் ரூம்,வீடு வாடகைக்கு விடுபவர்களின் எண்கள் அல்லது தரகர்களின் எண்கள் இருக்கும். அவர்களைத் தொடர்புகொண்டு ரூம்,வீடுகளைப் பார்த்த பின் வாடகைக்கு எடுத்து தங்கிக் கொள்ளலாம்.

நீங்கள் தங்க போகின்ற இடம் நீங்கள் வேலைச் செய்யும் இடத்திற்கு அருகில் இருப்பது நல்லது. தனியாக வாடகைக்கு ரூம், வீடு எடுத்து தங்குவதை விட, ஒரு ரூம்களில் மூன்று அல்லது நான்கு பேர்களுடன் தங்கிக் கொள்வது நல்லது. இதன் மூலமாக வாடகைச் செலவை மிச்சப்படுத்தலாம். கம்பெனிகளில் தங்குமிடத்திற்கான allowance கொடுப்பார்கள்.