சிங்கப்பூரில் IOB வங்கியில் NRI Account ஓபன் செய்வது பற்றி முழு விவரமாக தெரிந்து கொள்வோம். NRI (Non-ResidentIndian) என்பது இந்தியாவில் தங்காமல் வெளிநாட்டுகளில் ஆறு மாதங்களுக்கு மேலாக தங்குபவர்கள். இதில் இரண்டு வகையான Account கள் இருக்கின்றன. இது எல்லா நாட்டிற்கும் பொதுவானது.
அதில் ஒன்று NRE (Non-Residential External). இதில் எவ்வளவு பணவர்த்தனைச் செய்தாலும் இந்தியாவில் இதற்கென வரியை(Tax) பிடித்தம் செய்ய மாட்டார்கள். ஆனால் சிங்கப்பூரிலிருந்து Account மூலமாக பணம் எடுக்க முடியாது. இந்தியாவில் இருந்து மட்டுமே பணம் எடுக்க முடியும்.
இரண்டாவதாக, NRO (Non-Residential Ordinary). இதில் எங்கிருந்து வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். அதாவது சிங்கப்பூரிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். இந்தியாவிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.ஆனால்,இதில் அதற்கான வரியை(Tax) பிடித்தம் செய்வார்கள்.NRI account என்பது இவ்விரண்டையும் சேர்ந்தது. வெளிநாட்டில் இருந்து account ஓப்பன் செய்வதை NRI account என்று சொல்லுவார்கள்.
NRE account மிகச் சிறந்த ஒன்று. சிங்கப்பூருக்கு வேலை செய்வதற்காக வருபவர்கள் அவருக்கு சம்பாதிக்கும் சம்பாத்தியத்தை சரியான முறையில் செலவு செய்ய வேண்டும் என்றும், அதனை ஊருக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் அவர்களில் இருக்கும். இவ்வாறு நினைப்பவர்கள் NRE Account சிறந்தது. இதில் பண வர்த்தனையின் போது வரி (Tax) பிடித்தம் செய்ய மாட்டார்கள்.
சிங்கப்பூர் POSB வங்கியில் மூலமாக இந்தியாவிற்கு பணம் அனுப்ப முடியும். Western Union Bank வங்கி மூலமாகவும் பணம் அனுப்ப முடியும். NRE account மூலமாக பண வர்த்தனை செய்ய முடியும். லோன் போட நினைப்பவர்கள் NRE account மூலமாக லோன் பெறுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அதில் பணவர்த்தனை சரிவர இருந்தால் மிகுந்த பயனுடையதாக இருக்கும்.
சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் SBI மற்றும் IOB ஆகிய இரண்டு வங்கிகளும் இருக்கிறது. ஒரு சிலர் சேமிப்பிற்காக Account open செய்வார்கள். ஒரு சிலர் லோன் எடுப்பதற்காக NRI account open செய்வார்கள். இந்தியாவில் இருக்கும் தங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாகவோ , அல்லது உறவினர்கள் மூலமாகவோ நீங்கள் இருக்கும் இடத்தில் அருகே இருக்கிற IOB மற்றும் SBI ஆகிய வங்கிகளுக்குச் சென்று லோன் வட்டி விகிதத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்து கொண்ட பிறகு, இதில் எதில் மிகக் குறைவான வட்டி விகிதம் இருக்கிறதோ அந்த வங்கியில் லோன் எடுப்பதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
IOB வங்கியில் Original Passport, Company Letters சமர்ப்பிக்க தேவையில்லை. IOB வங்கியில் சமர்ப்பிக்க வேண்டியவைகள், Passport size photos (3),Passport Xerox, Permit Xerox, Original Permit. லிட்டில் இந்தியாவில் இருக்கும் IOB வங்கிக்கு 2.15-2.30 மணியளவில் செல்ல வேண்டும். அவர்கள் கொடுக்கின்ற Form பூர்த்திச் செய்ய வேண்டும். பின்னர் உங்களுக்கென்று appointment போடுவார்கள். ஒரு நாளைக்கு மிக குறைவானவர்களுக்கு மட்டுமே NRI account open செய்து கொடுப்பார்கள். அதன்பின், 4.00 மணியளவில் வங்கிக்கு வர வேண்டும் என்று கூறுவர்.Form பூர்த்தி செய்யப்பட்ட பிறகு, 160 dollars வாங்குவார்கள். 30 டாலர்கள் Sevice charge காக பிடித்துக் கொள்வார்கள். மீதம் 130 டாலர்ஸ்களை Account-ல் ஏறிவிடும். ஒரு மாதத்திற்குள் தொலைபேசி மூலம் அழைப்பார்கள். சமர்ப்பிக்கப்பட்ட அனைத்தும் சரி பார்த்த பிறகு,தொலைபேசி மூலம் அழைப்பார்கள். இதன்பின் வங்கிற்கு சென்று Internet banking open செய்துக் கொள்ளலாம். ATM card வாங்கிக் கொள்ளலாம்.NRE account மிகச் சிறந்த ஒன்றே.