சிங்கப்பூருக்கு செல்ல S Pass, E Pass,Shipyard Permit, PCM Permit, NTS Permit என பல பாஸ்கள் உள்ளன. தற்போது சிங்கப்பூர் வேலைக்கு செல்வது மிகவும் கடினமாக உள்ளது. அதனால் எந்த பெர்மிட்டில் வேலை கிடைத்தாலும் அது எந்த வேலையாக இருந்தாலும் சிங்கப்பூர் செல்கின்றனர்.அதன் பிறகு அவர்களின் திறமைக்கேற்ற வேலையை தேடுகின்றனர்.உங்களுக்கான வேலையும் கிடைத்து விடுகிறது. ஆனால் எப்படி வேறு வேலைக்கு மாறுவது என்பது தெரியாமல் அவர்களுக்கான வாய்ப்பை இழந்து விடுகின்றனர்.இப்பதிவில் அதற்கான விளக்கத்தை தெளிவாக காண்போம்.
தற்போது சிங்கப்பூர் செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. ஏனென்றால் S Pass, E Pass இல் வேலை கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. அல்லது Quota கிடைப்பதும் சிரமமாக உள்ளது.முதலில் எந்த வேலை கிடைத்தாலும் சிங்கப்பூருக்கு சென்று விடுங்கள். அதன் பிறகு நீங்கள் அங்கே வேலை செய்து கொண்டே வேறு வேலைக்கு முயற்சி செய்யலாம். நீங்கள் அங்கு சென்றவுடன் உடனே வேலையைத் தேடாமல் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் கழித்து தேடுங்கள்.அல்லது நீங்கள் எவ்வளவு செலவு செய்து சிங்கப்பூர் சென்றீர்களோ அதற்கான பணத்தை சம்பாதித்த பிறகு முயற்சி செய்வது மிகவும் நல்லது.உங்களுக்கு தெரிந்தவர்கள் மூலமாக அல்லது ஏஜென்ட்கள் மூலமாக வேலையைத் தேட முயற்சியுங்கள்.
அதற்காக ஏஜென்ட்கள் அதிக பணம் கேட்டால் செலுத்தி விடாதீர்கள்.
அடுத்ததாக நீங்கள் வேலை செய்யும் கம்பெனியின் HR க்கு Resignation லெட்டரை இ-மெயில் மூலமாக அனுப்ப வேண்டும். நீங்கள் அப்ளை செய்த வேலைக்கான approval கிடைத்தால் மட்டுமே Resignation அனுப்புங்கள்.வேலை கிடைப்பதற்கு முன்னதாகவே இ-மெயில் அனுப்பி விடாதீர்கள். ஏனென்றால் நீங்கள் அப்ளை செய்த வேலை கிடைக்காமல் போவதற்கும் வாய்ப்புண்டு. அதனால் Approval கிடைப்பதற்கு முன்னதாகவே Resignation லெட்டரை கொடுத்து விடாதீர்கள்.
அதோடு நீங்கள் வேறு வேலைக்கு அப்ளை செய்த கம்பெனியின் இன்டெர்வியின் போது தற்போது எங்கு வேலை செய்கிறீர்கள், எத்தனை நாட்கள் நோட்டீஸ் பீரியட் என அனைத்தையும் முன்கூட்டியே கூறி விடுங்கள்.
நீங்கள் resignation கொடுத்த பிறகு கம்பெனி அதனை approval செய்ய வேண்டும். அதன்பின் உங்களுக்கான சம்பளம் என அனைத்தையும் செட்டில் செய்து உங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
ஆனால் ஒரு சில கம்பெனிகள் இவ்வாறு செய்வதில்லை. சில பிரச்சனைகளையும் எதிர்கொள்ள நேரிடலாம்.நீங்கள் தாராளமாக MOM – ஐ நாடலாம். அவர்கள் உங்களுக்கான தீர்வை வழங்குவார்கள்.