சிங்கப்பூர் செல்ல குறைந்த செலவில் டூரிஸ்ட் விசா எடுப்பது எப்படி? அதன் காலஅவகாசம் எத்தனை நாட்கள்?

சிங்கப்பூர் செல்ல குறைந்த செலவில் டூரிஸ்ட் விசா எடுப்பது எப்படி? அதன் காலஅவகாசம் எத்தனை நாட்கள்?

இப்பதிவினை முழுமையாக படித்து விட்டு உங்களுக்கு எந்த வழி சிறந்ததாக சுலபமாக தெரிகிறதோ அதைப் பயன்படுத்தி சிங்கப்பூருக்கு செல்லும் வாய்ப்பினை பெற்று பயன்பெறுங்கள்.

சிங்கப்பூர் செல்ல டூரிஸ்ட் விசாவில் செல்வதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன. டூரிஸ்ட் விசாவில் சிங்கப்பூர் செல்வதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம்.

நீங்கள் அங்கு சுற்றிப் பார்க்க சென்றால் குறைந்தது பத்து நாட்களில் சுற்றிப் பார்த்து விடலாம். உங்களுடைய உறவினர்களை அல்லது கணவரை பார்க்கச் செல்லும்போது குறைந்தது 2 மாதங்கள் வரை அங்கு தங்க அனுமதி கிடைக்கும். அவர்களின் இந்தியா வருகைக்கான செலவும்,நீங்கள் அங்கு யாரை பார்க்க செல்ல உள்ளீர்களோ அதற்கு ஆகும் செலவும் சமமானதாக தான் இருக்கும்.

டூரிஸ்ட் விசா எப்படி எடுப்பது?

டூரிஸ்ட் விசா எடுப்பதற்கு சிங்கப்பூரில் உங்களுடைய உறவினர்கள் அல்லது கணவர் வேலை பார்க்கும் இடத்தில் சிங்கப்பூரர்கள் அல்லது சிங்கப்பூர் PR கண்டிப்பாக வேலை செய்வார்கள்.

உங்களுக்கு விசா அப்ளை செய்வதற்கு அவர்கள் உதவி செய்தால் குறைந்தது 35$ மட்டுமே செலவாகும்.

மேலும் ஆன்லைனில் விசா அப்ளை செய்தபின் அவர்களே உங்களுக்கு எடுத்து கொடுத்து விடுவார்கள்.

அல்லது அவர்களுக்கு அப்ளை செய்ய தெரியவில்லை என்றால் அங்கு ஏஜென்சிகள் நிறைய உள்ளன. அவர்களிடம் அப்ளை செய்தால் குறைந்தது $45 முதல் $50 வரை செலவாகும்.

சிங்கப்பூரில் டூரிஸ்ட் விசா எப்படி எடுப்பது என்பது தெரிந்து கொண்டோம். இந்தியாவில் எப்படி எடுக்கலாம் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு சிங்கப்பூரில் எவரையும் தெரியாது என்றால் இந்தியாவிலிருந்து விசா எடுக்கலாம். இந்தியாவில் உள்ள டிராவல்ஸ்க்கு சென்று விசாவிற்கு அப்ளை செய்யலாம். விசா எடுப்பதற்கான டாக்குமெண்ட்களை அவர்களிடம் கொடுத்தால் அப்ளை செய்து கொடுப்பார்கள். இதற்கு அதிக தொகை செலவாகும். குறைந்தது ₹4000 முதல் ₹8000 வரை செலவாகும். அதனால் சிங்கப்பூரில் உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் அவர்கள் மூலம் முயற்சி செய்தால் குறைவான செலவே ஆகும்.

டூரிஸ்ட் விசா காலஅவகாசம் :

டூரிஸ்ட் விசா காலஅவகாசம் ஒரு மாதம் மட்டும்தான். அதன்பின் உங்களுக்கு காலஅவகாசம் நீட்டிக்க வேண்டும் என்றால் 10 நாட்களுக்கு முன்னதாகவே ரெனீவல் செய்ய வேண்டும். நீங்கள் இவ்வாறு செய்தால் கூடுதலாக ஒரு மாதம் வரை சிங்கப்பூரில் தங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்படும்.