சிங்கப்பூரில் அதிக சம்பளம் வாங்குவது எப்படி?
தற்போதைய சூழ்நிலையில் சிங்கப்பூர் செல்வதே குதிரை கொம்பாக உள்ளது.
படிப்பிற்கு தகுந்த வேலை கிடைப்பதில்லை வேலைக்கு தகுந்த சம்பளம் கிடைப்பதில்லை.சம்பளத்திற்கு தகுந்ததை போல் ஏஜெண்ட் பீஸ் சொல்வதும் இல்லை.
இந்த சூழ்நிலையில் பலரும் சிங்கப்பூர் ஏன் செல்ல வேண்டும்?? என்ற யோசனையில் உள்ளனர்.
மற்ற நாடுகளுக்கும் சிங்கப்பூருக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால் நீங்கள் சிங்கப்பூர் செல்லும் பொழுது இருக்கும் சம்பளம் திரும்பி வரும் பொழுது இருக்காது.
அதாவது நீங்கள் முதலில் செல்லும் பொழுது உங்கள் மாத சம்பளம் 1000 சிங்கப்பூர் டாலராக இருந்தால் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கழித்து உங்கள் சம்பளம் 1200 to 1500 டாலராக ஆக இருக்கும்.
இது கம்பெனியை பொருத்து மாறுபடும் இதைவிட அதிகமாக சம்பளம் வாங்குவதற்கும் வாய்ப்பு உள்ளது.
இதுபோல் அதிகமாக சம்பளம் வாங்க என்ன செய்ய வேண்டும் என்றால் , உங்களுடைய தகுதியை நீங்கள் உயர்த்திக் கொள்ள வேண்டும்.
அதற்கு சிங்கப்பூரில் பல வழிகள் உள்ளது. அதில் மிகவும் முக்கியமானது உங்கள் வேலைக்கு அல்லது உங்களது வேலையில் நீங்கள் அடுத்தபடி எடுத்து வைக்க என்ன படிப்பு தேவை என்று பார்த்து அது எங்கு சொல்லி கொடுக்கிறார்கள் என்றும் பார்த்து அதை நீங்கள் படித்து அதற்கான சான்றிதழை பெற்று உங்கள் கம்பெனியில் கொடுத்தால் உங்கள் சம்பளம் உயர அதிகமான வாய்ப்புகள் உள்ளது.
ஆனால் நீங்கள் படிக்கும் Course உங்கள் கம்பெனிக்கு தேவையானதாக இருக்க வேண்டும். இது போன்ற Course – களை நீங்கள் படித்து உங்கள் சம்பளத்தை உயர்த்திக் கொள்ளலாம்.
ஆனால் உடனடியாக எதையும் செய்து விட முடியாது அதற்காக நீங்கள் காத்திருக்க வேண்டும். உங்கள் வேலை நேரம் போக பகுதி நேரங்களிலும் நீங்கள் படிக்கலாம் விடுமுறை நாட்களிலும் இதுபோன்ற course -கள் நடத்தப்படுகிறது.
எனவே இது போன்ற சரியான Course -ஐ நீங்கள் தேர்ந்தெடுத்து அதில் தேர்ச்சி பெற்றால் உங்கள் சம்பளம் நிச்சயமாக உயரும்.
Follow us on : click here