உங்களுடைய IPA வை எப்படி கேன்சல் செய்வது!!

உங்களுடைய IPA வை எப்படி கேன்சல் செய்வது!!

நாம் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் அதற்கு விசா (IPA)மிகவும் முக்கியம்.

இதுபோன்று விசா வந்த பிறகு நம்மால் சிங்கப்பூர் செல்ல முடியவில்லை என்றாலோ அல்லது வேறு காரணத்திற்காகவோ நமது விசாவை எப்படி Cancell செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.நமக்கு விசா வந்து விட்டால் அதை முதலில் நாம் MOM websiteல் சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

முடிந்தவரை உங்களுக்கு வேலை அனுமதி கிடைத்தவுடன் அதை தவிர்க்காமல் சிங்கப்பூர் சென்று விடுவது நல்லது.ஏனென்றால் இதை நீங்கள் கேன்சல் செய்தால் மறுமுறை உங்களுக்கு Apply செய்ய கம்பெனிகள் தயங்குவார்கள்.

அதனால் முடிந்தவரை நீங்கள் சென்று விடுவது நல்லது.ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் உங்களுடைய விசாவை நீங்கள் கேன்சல் செய்ய வேண்டும் என்றால் உங்களுடைய ஏஜெண்டிடம் முதலில் பேசிப் பாருங்கள்.

அவர்கள் உங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் உங்கள் விசாவில் இருக்கும் கம்பெனிக்கு நீங்கள் மின்னஞ்சல்(email) மூலம் நீங்கள் வர முடியாத காரணத்தை சொல்லி உங்களுடைய விசாவை கேன்சல் செய்யுமாறும் கேட்டுக் கொள்ளலாம்.

அதற்கும் உங்களுக்கு சரியான பதில் வரவில்லை என்றால் இறுதி கட்டமாக நீங்கள் சிங்கப்பூர் மனிதவள அமைச்சிடம் முறையிடலாம்.

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது சிங்கப்பூர் மனிதவள அமைச்சிடம் உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் உங்களுடைய விசாவில் உள்ள Fin no மற்றும் உங்களுடைய பாஸ்போர்ட் நம்பர் இவை அனைத்தையும் இணைத்து உங்களுடைய விசா Cancell செய்வதற்கான காரணத்தையும் தெளிவாக விளக்கி மின்னஞ்சல்(email) அனுப்பினால் உங்களுடைய விசா கேன்சல் செய்யப்படும்.

நீங்கள் மனிதவள அமைச்சுக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி
mom_wpd@mom.gov.sg
இது போன்ற பதிவுகளை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் தொடர்ந்து நமது sgtamilan இணைய பக்கத்தில் இணைந்திருங்கள்.