ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் விசாவை எப்படி கேன்சல் செய்வது ?

ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் விசாவை எப்படி கேன்சல் செய்வது ?

ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் விசாவை எப்படி கேன்சல் செய்வது என்பது குறித்து இப்பதிவில் காணலாம்.

நமது சப்ஸ்கிரைபர் ஒருவர் ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் அவருக்கு வந்த IP-ஐ எவ்வாறு கேன்சல் செய்தார் என்பதை தகுந்த ஆதாரத்துடன் இப்பதிவில் காணலாம்.

உங்களுக்கு தெரியாமல் அல்லது உங்களிடம் கேட்காமல் IP அப்ளை செய்தால் MOM க்கு அனுபவதற்கு முன் முதலில் நிறுவனத்திற்கு இமெயில் அனுப்புங்கள்.உங்களுடைய IP ஐ கேன்சல் செய்யுமாறு கேளுங்கள். ஒரு சில நிறுவனங்கள் அவர்களே கேன்சல் செய்து விடுவார்கள். ஆனால் ஒரு சில நிறுவனங்கள் நீங்கள் ஏஜென்டிடம் பேசி கொள்ளுங்கள் என்று கூறுவார்கள்.அவர்கள் உங்களுக்கு சரியாக பதிலளிக்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக MOM க்கு இமெயில் அனுப்புங்கள்.

Mom_wpd@mom.gov.sg என்ற இமெயில் ஐடிக்கு மெயில் அனுப்ப வேண்டும். உங்களிடம் கேட்காமல் ஐபி அப்ளை செய்து விட்டார்கள் என்றும்
அதை கேன்சல் செய்து தர வேண்டும் என்று அதில் தெரிவிக்க வேண்டும்.
உடனடியாக உங்களுக்கு ஒரு ரிப்ளை வரும் நீங்கள் அதற்கு எந்த பதிலும் அளிக்க தேவையில்லை.

அதன் பிறகு MOM அதிகாரி உங்களுக்கு நேரடியாக பதில் அளிப்பார்.

நீங்கள் உங்கள் நிறுவனத்திடம் பிரச்சனையை கூறி
அதற்கான தீர்வு கிடைக்குமா என்று முயற்சி செய்து பாருங்கள் என்று கூறுவார். அப்படி முடியவில்லை என்றால் அவர்கள் கேட்கும் டாக்குமெண்ட்களை அனுப்புமாறு கேட்பார்.

தேவையான டாக்குமெண்ட்கள் :

* ஐடி ப்ரூப் அதாவது பாஸ்போர்ட்

* நீங்கள் கைப்பட எழுதிய லெட்டர்

நீங்கள் எதற்காக IP ஐ கேன்சல் செய்கிறீர்கள் என்பதற்கான கரணம் அந்த லெட்டரில் இருக்க வேண்டும். அதில் உங்களுடைய கையெழுத்து இருக்க வேண்டும்.

இவைகளை ஸ்கேன் செய்து அவர்களுக்கு அனுப்பி விட்டால்,நேரடியாக நிறுவனத்திற்கே அனுப்பிவிடுவார்கள்.

நிறுவனத்திடம் கேட்டபின் உங்களுடைய IP ஐ கேன்சல் செய்து விடுவார்கள். இதற்கு நீங்கள் ஒரு ரூபாய் கூட கட்டணம் செலுத்த தேவையில்லை.