2025-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் வேலை வாய்ப்பில் எந்தெந்த பாஸ்களுக்கு எவ்வளவு சம்பளம்?

சிங்கப்பூரில் 2025 ஆம் ஆண்டு எந்தெந்த பாஸ்களுக்கு எவ்வளவு சம்பளம் என்பது பற்றியும் அதேபோல ஏஜென்ட் கட்டணம் எவ்வளவு என்பது பற்றியும் தோராயமாக இங்கு காணலாம்:
MOM விதிமுறைகளின் படி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். ஆனால் அனைத்து நிறுவனங்களும் அதை முறையாக பின்பற்றுகிறார்களா என்பது கேள்விக்குறியே?!.
2025 ஆம் ஆண்டில் S-pass, E-pass,NTS permit:
S-pass, E-pass,NTS permit போன்ற பெர்மிட்களுக்கு ஆரம்ப சம்பளமாக $1200 முதல் $2500 வெள்ளி வரை (இந்திய மதிப்பின்படி ₹60,000 முதல் ₹1,50,000 வரை) இருக்கும் என்று ஏஜென்ட்கள் தரப்பில் கூறுகின்றனர்.
சில பெரிய நிறுவனங்கள் மட்டுமே சரியான முறையில் வழங்க வேண்டுமென்பதற்காக $2500 வெள்ளிக்கும் மேல் சம்பளமாக வழங்குகிறார்கள். அதே போல ஊழியர்களுக்கு நல்ல திறமை மற்றும் அனுபவம் இருந்தால் இந்த சம்பளத்தை முழுமையாக வழங்கும்.
ஏஜென்ட் கட்டணத்தை சம்பளத்தை வைத்து நிர்ணயிக்க மாட்டார்கள்.
எந்தெந்த பாஸ்களுக்கு எவ்வளவு கட்டணமாக வாங்க வேண்டும் என்பதை முன்கூட்டியே நிர்ணயித்திருப்பார்கள்.
இந்த மூன்று பாஸ்களுக்கு ஏஜென்ட் கட்டணமாக ₹500000முதல் ₹900000 லட்சம் வரை பெறுகிறார்கள்.
TEP,TWP:
TEP ,TWP ஆகிய பாஸ்களுக்கு $1400 முதல் $1600 வெள்ளி வரை (இந்திய ரூபாய் மதிப்பின்படி ₹70000 முதல் ₹100000 வரை) சம்பளமாக கிடைக்கும்.
TEP,TWP ஆகிய பாஸ்களுக்கு ₹130000 முதல் ₹250000 லட்சம் வரை ஏஜென்ட் கட்டணம் வாங்குகிறார்கள்.
PCM-SHIPYYARD Permit:
இந்த பெர்மிட்களில் செல்வோர்களுக்கு மிகவும் குறைவான சம்பளமே கிடைக்கும்.
இந்த பெர்மிட்களில் இந்திய ரூபாயின் மதிப்பின் படி ₹30,000 முதல் ₹45,000 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும்.
ஏஜென்ட்கள் கட்டணமாக ₹200000 முதல் ₹400000 வரை வாங்குகிறார்கள்.
PSA:
இந்த பெர்மிட்டில் டிரைவர், லேசிங், டெக்னீசியன்,ஆபரேட்டர் போன்ற வேலைகளுக்கு செல்லலாம்.
இந்த வேலைகளுக்கு டிரைனிங் கொடுப்பார்கள் .டிரைனிங் முடிந்தவுடன் ₹50,000 முதல் ₹100000 வரை நீங்கள் வீட்டிற்கு அனுப்பலாம்.
இந்த பாஸ்ஸிற்கு ஏஜென்ட்கள் கட்டணமாக ₹2,50,000 முதல் ₹3,50,000 வரை பெறுகிறார்கள்.
House made permit:
இந்த பெர்மிட்டுக்கு அதிகமாக பெண்களைத் தான் தேர்தெடுப்பர்.
இதற்கு ஏஜென்ட் கட்டணம் கட்ட தேவையில்லை.
இந்த பெர்மிட்டுக்கு $350 முதல் $550 வெள்ளி வரை (இந்திய ரூபாய் மதிப்பின்படி ₹25000 முதல் ₹40,000 வரை) சம்பளமாக கிடைக்கும்.
Work permit:
டெஸ்ட் அடித்ததில் பாஸ் செய்து விட்டால் டெஸ்ட் பேப்பர் நம்மிடம் கொடுப்பது இல்லை.அதற்கும் சேர்த்து மொத்தமாக டெஸ்ட் கட்டணத்தை வாங்கி விடுகிறார்கள். இதற்காக ஏஜென்ட்கள் கட்டணமாக இந்தியா ரூபாய் மதிப்பில் ₹5,50000 முதல் ₹600000 வரை வாங்கிறார்கள்.
தினசரி சம்பளம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.
$18 முதல் $20 வெள்ளி வரை சம்பளமாக கிடைக்கும்.ot யும் இருக்கும்.இந்திய ரூபாய் மதிப்பின்படி ₹40,000 முதல் ₹45,000 வரை கிடைக்கும்.
இறுதியாக , இப்பதிவில் நாங்கள் குறிப்பிட்டுள்ள சம்பள விவரங்கள் அனைத்தும் தோராயமாக தெரிவித்துள்ளது மட்டுமே. இப்பதிவில் குறிப்பிட்டுள்ள சம்பளம் ஒவ்வொரு கம்பெனியைப் பொறுத்து மாறுபடும் . அதேபோல ஏஜென்ட் கட்டணமும் ஒவ்வொரு ஏஜென்ட்கள் பொறுத்தும் மாறுபடும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan