சிங்கப்பூரில் பார்க்கிங்கில் நுழைய கேன்ட்ரி வழியாக செல்ல $1330!! இவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்று பலரையும் ஆச்சரியப்படுத்தி கேள்விகளை எழுப்பியுள்ளது.
அப்படி ஓர் சம்பவம் ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட்டில் நடந்துள்ளது.
SG Road Vigilante பேஸ்புக் பக்கத்தில் ஓர் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் தங்களின் கருத்துகளை கூறி வருகின்றனர்.
ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 75-இல் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கார் பார்க்கிற்குள் சாலை பயணி நுழைந்தார். அவர் நுழைவதற்கு $1330 க்கும் மேல் கட்டணம் காட்டியது.
இச்சம்பவம் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.50 மணியளவில் நடந்தது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கார் பார்க்கிங்கிற்குள் நுழைய ஏன் இவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது? என நெட்டிசன்கள் கேள்வி கேட்டனர்.
அதோடு டெயில்கேட் குற்றவாளி என்றும் கூறினர்.
இன்னும் ஒரு சிலர் கேள்விகளை எழுப்பினர்.
இது கணினியில் தொழில்நுட்ப கோளராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.