TEP பாஸ்ஸில் முயற்சித்தால் சிங்கப்பூரில் எத்தனை மாதங்கள் வரை இருக்கலாம்? தெளிவாக ஏஜென்ட்டிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்……

TEP பாஸ்ஸில் முயற்சித்தால் சிங்கப்பூரில் எத்தனை மாதங்கள் வரை இருக்கலாம்? தெளிவாக ஏஜென்ட்டிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்......

TEP பாஸ்ஸில் சிங்கப்பூருக்கு செல்லலாமா?வேண்டாமா? அதை எப்படி extend செய்வது?ஏன் 3+1 என்று கூறுகிறார்கள்? என்பதைப் பற்றி தெளிவாக இப்பதிவில் தெளிவாக தெரிந்து கொள்வோம் .

முதலில் TEP PASS என்றால் என்ன? :

TEP என்றால் Temporary Employment Pass.

இதே போல் மற்றுமொரு பாஸும் உள்ளது.அது TWP பாஸ் என்றழைக்கப்படும்

இவ்விரண்டும் SHORT TERM PASS என்று கூறப்படும்.

இவ்விரண்டுக்கும் மெடிக்கல் தேவையில்லை .Bond paper வும் தேவையில்லை. அது மட்டுமல்லாமல் விசாவுக்கான காலஅவகாசமும் குறுகிய காலமே .

TEP பாஸ்க்கு நீங்கள் முயற்சித்தால் சிங்கப்பூரில் எத்தனை மாதங்கள் வரை இருக்கலாம் என்பதை ஏஜென்டிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

TEP PASS என்றாலே ஏன் 3+1 என்று கூறுகிறார்கள்?

பெரும்பாலும் TEP பாஸ்க்கு 3+1 என்று கூறுவார்கள் .அது ஏன் என்று இதுவரை சிந்தித்துள்ளீர்களா?

3+1 என்றால் IP வந்தவுடன் நீங்கள் சென்றபிறகு வேலை செய்ய ஆரம்பித்து விடுவீர்கள் .உங்களுக்கு அங்கு mom இல் appointment பதிவு செய்யப்படும்.உங்களுக்கு கொடுக்கப்பட்ட appointment தேதியன்று mom க்கு சென்று கைரேகை வைக்க வேண்டும்.MOM கொடுத்த appointment தேதியிலிருந்து மூன்று மாதக் கணக்காகும்.

ஒரு சில கம்பெனிகள் ,ஏஜென்ட்கள் நீங்கள் அங்கு சென்றவுடன் mom இல் அப்ளை செய்யாமல் காலம் தாழ்த்தி வருவார்கள்.இதனால் ஒரு மாதம் கடந்து விடும். இன்னும் ஒரு சிலர் ஒன்றை மாதங்கள் கழித்து அப்ளை செய்வார்கள்.இதனால் TEP பாஸ்க்கு 5 மாத விசாக் காலம் என்று கூறுவார்கள்.

MOM இல் கைரேகை வைத்த நாளில் இருந்து கணக்கு செய்வதால் 3+1 அல்லது 5 மாதம் என்று கூறுகிறார்கள்.

ஒரு சிலர் அவர்களுக்கு சாதமாக பயன்படுத்தி TEP பாஸ்ஸில் 5 மாதத்திற்கு மேல் விசாக்காலம் என்று கூறி அதிகப்பணம் வசூலிக்கிறார்கள்.ஆனால் 5 மாதங்களுக்கு மேல் விசாக்காலத்திற்கு சாத்தியம் இல்லை.

கைரேகை வைப்பதற்கு அதிகபட்சம் ஒரு மாதம் தான்.

முடிந்தவரை நீங்கள் கட்டிய பணத்தை மூன்று மாதங்களுக்குள் எடுப்பதோடு அதற்கு மேல் உங்களுக்கு லாபமாக இருக்க வேண்டும்.

TEP பாஸ்ஸில் திரும்ப வந்தவுடன் மீண்டும் சிங்கப்பூருக்கு வேறு பாஸ்ஸில் செல்ல காலதாமதம் ஆகுமா?

நீங்கள் இந்தியாவுக்கு திரும்ப வந்தபிறகு மீண்டும் சிங்கப்பூருக்கு செல்வதில் காலதாமதமாவதாக சிலர் கூறுகின்றனர்.ஆனால் அப்படி அல்ல.நீங்கள் திரும்ப வந்தபிறகு மீண்டும் சிங்கப்பூருக்கு செல்லலாம்.நீங்கள் சரியான முறையில் டாக்குமெண்ட்களை சமர்ப்பிக்க வேண்டும்.அதோடு TEP PASS டாக்குமெண்ட்டையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.

இது போன்ற தகவல்களைத் தெரிந்துகொள்ள SGTAMILAN இணையப்பக்கத்தில் இணைந்திருங்கள்…….