கடந்த 2020 முதல் 2022 ஆண்டுகளில் பிள்ளைகள்,இளையர்களில் குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டோர் எத்தனை பேர் அல்லது எத்தனை பேருக்கு எச்சரிக்கை தண்டனை விதிக்கப்பட்டது என நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு சட்ட,உள்துறை அமைச்சர் கா.சண்முகம் எழுத்துப்பூர்வமாக பதில் தந்தார்.
16 வயதுக்குகீழ் உள்ளவர்களில் 2020-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்குச் சராசரியாக 873 பேருக்கு கடுமையான எச்சரிக்கை அல்லது நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
16 வயதுக்குகீழ் உள்ளவர்களில் 2020-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்குச் சராசரியாக 94 பேர் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.
அவர்களில் யாரும் குற்றம் சாட்டப்பட்டு விடுவிக்கப்படவில்லை.
இவர்கள் அனைவரையும் காவல்துறை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டனர்.