சிங்கப்பூரில் டிரைவிங் வேலை எப்படி இருக்கும். அதற்கு எவ்வளவு சம்பளம் பற்றிய முழு விவரத்தைக் காண்போம்.ஒரு சிலருக்கு இந்தியா வாகன ஓட்டுநர் உரிமம் அல்லது அரபு நாட்டு வாகன ஓட்டுநர் உரிமம் வைத்து சிங்கப்பூரில் டிரைவர் வேலைக்கு உபயோகப்படுத்தி சிங்கப்பூருக்கு வரலாமா?என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது.இந்தியா கனராக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்து சிங்கப்பூர் டிரைவர் வேலைக்கு வரலாம். ஆனால்,அரபு நாட்டு வாகன ஓட்டுநர் உரிமம் வைத்து வர இயலாது.
இந்தியா லைட் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்து இருந்தால் அதன் மூலமாக சிங்கப்பூருக்கு வந்ததிற்கு பிறகு அதனை மாற்றிக் கொள்ளலாம்.இந்தியா கனராக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்து இருந்தால் PSA(Port of Singapore Authority) டிரைவர் வேலைக்கு வரலாம்.
சிங்கப்பூரில் டிரைவராக வேண்டும் என்றால் சிங்கப்பூரில் கட்டாயமாக வாகன ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும். சிங்கப்பூரில் வாகன ஓட்டுநர் உரிமம் பலவகையாக இருக்கிறது.Class3C,Class3,Class4,Class5 என இன்னும் பலவகையான வாகன ஓட்டுநர் உரிமங்கள் சிங்கப்பூரில் பயன்படுத்தப் படுகிறது.
சிங்கப்பூர் வந்த உடன் ஓட்டுநர் உரிமம் பெற இயலாது. சிங்கப்பூரில் ஊழியராக பணிபுரிந்து கொண்டு வாகன ஓட்டுநர் உரிமத்திற்கு பதிவு செய்ய வேண்டும்.சிங்கப்பூரில் எப்படி ஓட்டுநர் உரிமம் பதிவு செய்ய வேண்டும்?. S பாஸ் அல்லது மற்ற பெர்மிட்கள் மூலமாக வேறு வேலைக்காக சிங்கப்பூர் வர வேண்டும். பின்னர், அங்கு பணிபுரிந்து கொண்டே வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கு சென்று கற்றுக்கொள்ள வேண்டும். சிங்கப்பூர் போக்குவரத்து விதிகளை கற்றுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஓட்டுநர் உரிமத்திற்கு பதிவு செய்ய வேண்டும்.
வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றதற்கு பின்னர் சிங்கப்பூரில் ஓட்டுநராக பணிபுரியலாம்.ஒரு சில கம்பெனிகளில் டிரைவிங் மட்டுமே வேலையாக இருக்கும். அதாவது கம்பெனியில் பணிபுரியும் ஊழியர்களை தங்கும் இடத்திலிருந்து வேலை செய்யும் இடத்திற்கு அழைத்து செல்லவும்.வேலை செய்யும் இடத்திலிருந்து தங்கும் இடத்திற்கு அழைத்து செல்வதாக இருக்கும். சில கம்பெனிகளில் உணவு டெலிவரி, மளிகை சாமான்கள் டெலிவரி செய்வது.பெரும்பன்மையாக டிரைவர் கம் தொழிலாளிகளாக தேர்ந்தெடுப்பார்கள்.டிரைவர் கம் தொழிலாளி என்றால் ஊழியர்களை பணி புரியும் இடத்திற்கு அழைத்து சென்றதற்கு பிறகு நாமும் அவர்களுடன் வேலை செய்ய வேண்டும்.
சிங்கப்பூர் டிரைவர் வேலைக்கான சம்பளம்? S pass மூலமாகவும் டிரைவர் ஆக வரலாம். ஒர்க் பெர்மிட் மூலமாகவும் டிரைவர் வேலைக்கு வரலாம்.ஒர்க் பெர்மிட் மூலமாக வரும் டிரைவர் வேலைக்கு 1400 முதல் 1800 வெள்ளி வரை சம்பளம் தர வாய்ப்புகள் இருக்கு.
இந்தியா ரூபாய் மதிப்பில், சிங்கப்பூரில் ஓட்டுநர் உரிமம் எடுப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு இலட்சத்திலிருந்து ஒன்னேகால் இலட்சம் வரை செலவிடப்படும்.டிரைவர் கம் ஒர்கர் ஆக இருந்தால் நிறைய பயன்கள் இருக்கிறது. சிங்கப்பூரில் டிரைவர் கம் ஒர்கர்களுக்காக புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.டிரைவர் கம் ஒர்க் செய்பவர்கள் கம்பெனியில் வேலை பார்த்த பிறகு ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்த பிறகு ஊழியர்களை ஏற்றிச்செல்ல வேண்டும்.ஒரு சில கம்பெனிகளில் செய்யும் வேலைக்கு சம்பளம் மற்றும் allowance கொடுப்பார்கள். சிங்கப்பூருக்கு எந்த பெர்மிட் மூலமாக செல்கிறோமோ அதைப் பொறுத்து சம்பளம் மாறுபடும்.அரபு நாட்டு ஓட்டுநர் உரிமம் செல்லாது ஆனால் இந்தியா ஓட்டுநர் உரிமம் வைத்து சிங்கப்பூரில் ஓட்டுநர் உரிமத்தை மாற்றிக் கொள்ளலாம்.
சிங்கப்பூரில் கம்பெனி வாகனங்களை தவிர வேறு எந்த வாகனமும் ஓட்ட அனுமதி கிடையாது.அரபு நாட்டுகளில் உரிமையாளர்கள் வாகனங்களை ஓட்டுவது,அவர்கள் இடத்திலையே தங்கி கொண்டு வேலை செய்வது போன்ற வேலைகள் அதிகமாக இருக்கும். ஆனால் சிங்கப்பூரில் இது குறைவு.இந்தியா குடிமகனாக இருந்தால் பாஸ்போர்ட் மற்றும் இந்தியா ஓட்டுநர் உரிமம் இரண்டிலும் ஒரே மாதிரியான முகவரி இருக்க வேண்டும்.சிங்கப்பூரில் ஓட்டுநர் உரிமத்திற்கு ஐந்து வருடம் பயன்படுத்தலாம். அதன் பிறகு அதனை புதுப்பித்துக் கொள்ளலாம்.