ஒரு மனிதனின் மதிப்பானது எவ்வாறு அளவிடப்படுகிறது?

ஒரு குட்டி ஸ்டோரி கேக்கலாமா?? முதலில் ஒரு கேள்வியோடு இந்த பதிவை தொடங்கலாம் வாங்க!!

ஒரு மனிதனின் மதிப்பானது எவ்வாறு அளவிடப்படுகிறது?? அவனின் உயர்ந்த பதவியின் மூலமா அல்லது அவன் சேர்த்த செல்வதின் மூலமா?? வாருங்கள் தெரிந்துகொள்வோம்…..

அதற்குமுன் இந்த குட்டி ஸ்டோரியை படித்துவிடுவோம்!!

ஒருவர் தனது படுக்கைகளோடு தனக்காக நிறுவப்பட்ட தனது உருவச்சிலை முன் ஒரு நடைப்பாதையில் படுத்து இருப்பது போன்ற ஒரு பதிவை பதிவிடுகிறார். மேலும் இதன் மூலம் அவர் மக்களுக்கு ஒன்று தெரிவிக்க ஆசைப்படுவதாகவும் கூறியிருந்தார்.

முதலில் இவர் யாரென்று பார்ப்போம்.இப்படி உருவச்சிலை சிலை வைக்கும் அளவுக்கு இவர் புகல் பெற்றவரா?? ஆமாங்க , உலக ஆணழகன் போட்டியை தனது 20 – ஆவது வயதில் பெற்று , Mr.ஒலிம்பியா ஆணழகன் பட்டத்தை ஏழு முறை வென்று உடற்கட்டு கலையின் உச்சம் தொட்ட ” Arnold Schwarzenegger ” தான் இவர்.

அதுமட்டும் இன்றி கலிபோர்னியா மாகாணத்தின் 38 – ஆவது ஆளுநராக அரசியலிலும் முத்திரை பதித்தவர். ஹாலிவுட் பாடங்களில் தனக்கென ஒரு சமஸ்தானம் ஏற்படுத்தி கொண்டவர்.

இப்படி ஒரு நடைப்பதையில் படுத்திருக்க காரணம் என்ன ? இவர் ஆளுநராக இருக்கும் போது ஒரு பிரபல ஹோட்டல் ஒன்றின் திறப்பு விழாவிற்கு சென்றிருக்கிறார்.அப்போது கடையின் உரிமையாளர் ” நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம் உங்களுக்காக எவ்வித கட்டணமும் இல்லை” என்று கூறி இருக்கிறார்.

பிறகு தனது ஆளுநர் பதவி கால முடிவிற்கு பிறகு அதே ஹோட்டலுக்கு சென்றிருக்கிறார் Arnold அவர்கள்.

அப்போது அவரிடம் அந்த ஹோட்டல் உரிமையாளர் தங்குவதற்கான அறை கட்டணமாக பணம் கட்டுமாறு கூறியுள்ளார்.

இதை கேட்ட Arnold அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டாராம். அதன் பிறகே இவ்வாறு ஒரு பதிவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது: பதவி மற்றும் பணம் அடிப்படையில் மட்டுமே ஒருவரின் மதிப்பை அளவிட முடியாது. வாழ்க்கையில் பணமும் பதவியும் நிரந்தரமில்லை.எனவே எப்போது ஒருவன் தனது வலிமையையும் , அறிவையும் நம்பி வாழ்கிறானோ அவன் உலகம் வெல்பவன் !! என்று கூறியுள்ளார்.