வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரில் செலவுகளை எப்படி சமாளிக்கிறார்கள்!!
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் எவ்வாறு எல்லாம் செலவு செய்கிறார்கள் என்பதை இப்பதிவில் தெளிவாக காண்போமா!! சிங்கப்பூரை Fine City என்றும் அழைப்பார்கள். ஏனென்றால், அது மிகவும் அழகாக இருக்கும்.
செலவுகள் :
🔸 தங்குமிட செலவு :
செலவுகளில் மிகவும் முக்கியமான செலவு என்ன வென்றால் நீங்கள் தங்கும் இடத்திற்கு செலவு செய்வதே.
உதாரணமாக நீங்கள் சிங்கப்பூர் சென்று வேலை செய்கிறீர்கள். அங்கு எங்கு தங்குவது? அதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பதைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு சில கம்பெனிகள் அவர்களே தங்குமிடத்தை தேர்வு செய்து கொடுப்பார்கள். அதனால் ஒரு சிலருக்கு அதற்கான செலவு மிச்சம் ஆகலாம்.
ஒரு சில கம்பெனிகள் உங்களுக்கான தங்குமிடத்தை நீங்கள் தான் தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்றும் முன்கூட்டியே கூறி விடுவார்கள்.நீங்கள் தங்க வேண்டிய இடத்தை நீங்களே தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும். உதாரணமாக நீங்கள் ஹோட்டலில் தங்கி வேலை செய்பவராக இருந்தால் உங்களால் அங்கு செலவை சமாளிக்க முடியாது. மேலும் அதற்கான வாடகை மிகவும் அதிகமாக இருக்கும்.
அதற்கு பதிலாக நீங்கள் வேலை செய்பவர்களோடு சேர்ந்து தங்கினால் வாடகையில் குறையும்.செலவுகளில் மிச்சமாகும்.
அல்லது வீடு,ரூம் போன்ற இடங்களைத் தேர்ந்தெடுத்து தங்கலாம்.
செய்யக்கூடாதது :
நீங்கள் தங்குமிடத்திற்காக யாரிடமும் முன் பணம் கட்டி விடாதீர்கள். ஏனெனில், அவர்கள் உங்களை ஏமாற்றுவதற்கும் வாய்ப்புண்டு. மோசடிகாரர்களிடம் சிக்கி கொள்ளாமல் சிந்தித்து செயல்படுங்கள்.
🔸 சாப்பாடு செலவு :
சாப்பாடு செலவு என்பது நாம் சாப்பிடும் அளவை பொறுத்து தான் செலவாகும். உதாரணமாக நீங்கள் சைவ உணவு சாப்பிடுபவராக இருந்தால் ஓர் நாளைக்கு $5, சிக்கன் $6, மட்டன் $7. சாப்பாடு செலவு மிகவும் குறைவாக செலவாக வேண்டும் என்று நினைப்பவர்கள், நீங்களாக சமைத்து சாப்பிடுவது, ஆர்டர் செய்து சாப்பிடுவது ஆகியவையாலும் செலவுகள் குறையும். ஆர்டர் செய்து சாப்பாடு என்பது டொமெட்ரியில் கிடைக்க கூடிய சாப்பாடு. இதற்கு செலவாகும் மாதத்தொகை $130 டாலர் முதல் $150 டாலர் வரை ஆகும்.மேலும் இந்த உணவின் தரம் சற்று குறைவாகத்தான் இருக்கும். ஒரு சில கடைகளில் ஒரு மாதத்திற்கென சாப்பாடு கொடுப்பார்கள். அதன் விலை $150 முதல் $170 டாலர் வரை இருக்கும்.
🔸 போக்குவரத்து செலவு :
வேலை செய்யும் இடத்திற்கு நீங்கள் செல்வதற்கு எவ்வளவு செலவாகும்? என்பதை விவரமாக தெரிந்து கொள்வோம்.மாதம் முழுவதும் வேலை இடத்திற்கு செல்ல டாக்ஸியில் சென்றால் அதற்கான மிக அதிகம். நீங்கள் குறைந்த செலவில் செல்ல வேண்டும்? செலவை மிச்சப்படுத்த வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் பொது பேருந்து மற்றும் MRT களில் பயணம் செய்யலாம். நீங்கள் இதில் ஏதேனும் ஒன்று மூலம் வேலை செய்யும் இடத்திற்கு சென்றால் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாக செல்லலாம்.
சிங்கப்பூரில் போக்குவரத்து துறையில் இன்னும் நிறைய வசதிகள் ஏற்பாடு செய்து கொண்டு வருகிறார்கள்.
பொதுவாக நீங்கள் சிங்கப்பூரில் ஒரு எல்லையில் இருந்து மறு எல்லைக்கு செல்வதற்கு குறைந்தது $5 வரை தான் செலவாகும்.
போக்குவரத்து செலவை எவ்வாறு குறைக்கலாம்?
உங்களுக்கு ஆகும் செலவில் போக்குவரத்து செலவை குறைக்க வேண்டும் என்று நினைப்பவராக இருந்தால், நீங்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகில் ரூம்களை எடுத்து தங்கினால் உங்களுக்கான பயணம் செய்யும் செலவு குறையும். சிங்கப்பூரில் வேலை பார்ப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு $1200 டாலர் முதல் $1500 டாலர் வரை சம்பளம் கிடைக்கும். அவர்களின் சம்பளத்தில் ஒரு தொகையை வீட்டிற்கு அனுப்புகிறார்கள். மீதியை செலவிற்காக வைத்து கொள்கிறார்கள்.
சிங்கப்பூரில் பெரும்பாலான கம்பெனிகளில் ஒர்க் பர்மிட், Shipyard பர்மிட் மூலம் வேலை செய்பவர்களுக்கு தங்குமிடம் இலவசமாக வழங்குகிறார்கள்.ஆனால்,S-Pass, E-pass மூலம் வந்தவர்களுக்கு தங்குமிடம் இலவசமாக வழங்குவது இல்லை.அவர்களுக்கான தங்குமிடத்தை தேடி கொள்ள வேண்டும். அதற்கு ஆகும் செலவு சொந்த செலவு தான்.மேலும் ஒரு சிலர் டார்மிட்டரியில் இருப்பவர்கள் அங்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு கொள்கின்றனர். அவர்களுக்கான செலவை மிச்சப் படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்கின்றனர். இதைத் தவிர்த்து அவர்களுக்கென போன் ரீசார்ஜ் செலவு மட்டும்தான். இவ்வாறு செய்வதால் அவர்களின் செலவில் அதிகமாக மிச்சப்படுத்துகிறார்கள்.அதனால் அவர்களுக்கு ஆகும் செலவுகளில் குறையும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg