இந்திய அணி T20 தொடரை வென்றது எப்படி…?? கொந்தளிக்கும் இங்கிலாந்து வீரர்கள்..!!!

இந்திய அணி T20 தொடரை வென்றது எப்படி...?? கொந்தளிக்கும் இங்கிலாந்து வீரர்கள்..!!!

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த 4வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணி நேற்று முதலில் பேட்டிங் செய்த போது, இந்திய அணி சார்பில் ஷிவம் துபே 34 பந்துகளில் 7 பவுண்டரிகள்,2 சிக்ஸர்களுடன் 53 ரன்களைப் பெற்றார்.கடைசி பந்தில் தலையில் அடிபட்டதால் இந்திய அணியால் பீல்ட் செய்யப்படவில்லை.பொதுவாக, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் போது ஒரு வீரர் காயம் அடைந்தால்,மற்றொரு வீரர் மாற்று வீரராக மாற்றப்படுவார்.

சர்ச்சைக்கான  காரணம்..

அவ்வாறு மாற்றப்பட்ட வீரர் பேட்டிங் செய்யவோ அல்லது பந்து வீசவோ மாட்டார். பீல்டிங் மட்டுமே செய்வார்கள்.இதைத்தான் பெரும்பாலான போட்டிகளில் பார்த்திருக்கிறோம். எனினும் நேற்று ஷிவம் துபேக்கு பதிலாக ஹர்ஷத் ராணா பந்துவீசினார்.

பந்துவீசியது மட்டுமின்றி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வெற்றிபெற செய்தார். இது இப்போது பெரும் விவாதத்தையும் விமர்சனத்தையும் உருவாக்கியுள்ளது.

விதிகளின்படி, காயத்திற்குப் பிறகு அவருக்குப் பதிலாக அடுத்த இன்னிங்ஸை முழுமையாக விளையாட அழைக்கப்படும் வீரர் கன்குசன் சப்ஸ்டியூட் என்று அழைக்கப்படுவார். அதாவது, ஒரு பேட்ஸ்மேன் காயம் அடைந்து வெளியேறினால், அவருக்குப் பதிலாக அடுத்த களம் இறங்கும் வீரர் பேட்ஸ்மேனாகத்தான் இருக்க வேண்டும்.

ஒரு பந்து வீச்சாளர் காயமடைந்தாலோ அல்லது விளையாட முடியாமலோ இருந்தால், அவருக்குப் பதிலாக ஒரு பந்து வீச்சாளரே
களமிறக்க வேண்டும்.ஒரு ஆல்-ரவுண்டருக்குப் பதிலாக மற்றொரு ஆல்-ரவுண்டரை நியமிக்க வேண்டும்.

இந்திய அணி செய்தது என்ன..??

அதிரடி பேட்ஸ்மேனும் ஆல்ரவுண்டருமான ஷிவம் துபேக்கு பதிலாக முழு நேர பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டதே தற்போதைய விமர்சனத்திற்கு காரணம். சர்வதேச விதிகளுக்கு எதிராக பேட்ஸ்மேனுக்கு பதிலாக ஒரு பவுலரை களமிறக்கியதுதான் இப்போது இந்த விமர்சனத்திற்கு காரணமாக பார்க்கப்படுகின்றது.

இந்திய அணியின் இந்தச் செயலை ஏமாற்று வேலை, மோசடி என்று விமர்சிக்கப்படுகிறது. இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்களான மைக்கேல் வாகன், கெவின் பீட்டர்சன் ஆகியோரும் இந்திய அணியை விமர்சித்துள்ளனர்.இந்திய அணிக்காக ஹர்ஷித் ராணா விளையாடும் முதல் டி20 போட்டி இதுவாகும்.