துணிச்சலாக செயல்பட்ட மினிபஸ் டிரைவர்!!மகாராஷ்டிராவில் நெடுஞ்சாலை கொள்ளையர்களிடம் இருந்து பயணிகளை காப்பாற்றியது எப்படி?
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில், திரு. கோம்தேவ் கவாடே என்ற மினிபஸ் ஓட்டுநர், வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்து தனது பயணிகளைக் காப்பாற்றியதற்காக அவரது துணிச்சலுக்காகப் பாராட்டப்படுகிறார்.
மார்ச் 10 ஆம் தேதி, அமராவதியிலிருந்து நாக்பூருக்கு 35 பயணிகளுடன் மினி பேருந்தில் சென்றபோது, அவர்களைப் பின்தொடர்ந்து வந்த கார் ஒன்றைக் கவனித்தார்.
அவர்கள் முந்திச் செல்ல வேண்டும் என்று நினைத்தார். அதனால் காருக்கு இரண்டு முறை வழி செய்தார்.
இருப்பினும், உத்தரபிரதேச உரிமத் தகடு கொண்ட கார், பஸ்ஸை முந்திச் சென்று நிறுத்துவதற்காக நான்கு முறை துப்பாக்கியால் சுட்டது.
துரதிர்ஷ்டவசமாக ஓட்டுநரின் கையில் தோட்டா பாய்ந்தது.
காயம் இருந்தபோதிலும், சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காவல் நிலையத்தை அடையும் வரை அவர் ஓட்டிக்கொண்டே இருந்தார்.
ஓட்டுநரின் வீரச் செயல் அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்தது.
திரு. கவாடே மற்றும் காயமடைந்த மூன்று பயணிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பேருந்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட காரில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த கும்பல் சில நாட்களுக்கு முன்பு திருடியதாக கூறப்படும் வாகனம் தொடர்பாக மற்றொரு விசாரணை தொடங்கியுள்ளது.