சிங்கப்பூர்:சிங்கப்பூர் வெலன்சியா கால்பந்து அணியின் உரிமையாளர் பீட்டர் லிம்முக்கு எதிராக பதாகை ஏந்திய ஸ்பெயின் நாட்டு ஜோடியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திரு.டேனி குவெஸ்த்தா தனது மனைவியுடன் தேனிலவுக்கு சிங்கப்பூர் வந்தார்.இங்கே அவர் அபேலியா கூட்டுறவு இல்லம், எஸ்பிளனேட், மெரினா பே போன்ற இடங்களில் திரு.லிம்முக்கு எதிராக வாசகங்களுடன் கூடிய பதாகை ஏந்தியபடி புகைப்படம் எடுத்தார்.
மேலும் அவர் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.தேன் நிலவுக்கு வந்த புதுமண தம்பதிகள் செய்த இச்செயல் பல்வேறு விமர்சனங்களை பெற்று வந்தது.இச்சம்பவம் தொடர்பாக தம்பதி மீது புகார் அளிக்கப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர்.
பின்னர் புதுமணத் தம்பதிகள் பாலிக்கு புறப்பட திட்டமிட்டனர்.ஆனால் அவை முறியடிக்கப்பட்டன.விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அவர்களது பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
திரு.லிம் 2014 இல் வெலன்சியா கால்பந்து அணியை வாங்கினார்.சமீபத்தில் அவர் வெலன்சியா கால்பந்து ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
நட்சத்திர வீரர்களின் விற்பனை, பயிற்சியாளர் நீக்கம், புதிய மைதானம் கட்டும் திட்டத்தால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ஒரு காலத்தில் புகழின் உச்சியில் இருந்த வெலன்சியா இப்போது லாலிகா தரவரிசையில் 18வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.