ஹோண்டா மற்றும் நிசான் நிறுவனங்கள் இணைந்து செயல்பட திட்டம்…!!!

ஹோண்டா மற்றும் நிசான் நிறுவனங்கள் இணைந்து செயல்பட திட்டம்...!!!

ஜப்பானின் ஹோண்டா மற்றும் நிசான் நிறுவனங்கள் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்சார வாகனங்களின் முக்கிய உலகளாவிய உற்பத்தியாளர்களிடமிருந்து அவர்கள் கடுமையான போட்டியை எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் தொடர்ச்சியான வளர்ச்சியினால் ஹோண்டா மற்றும் நிசான் நிறுவனங்கள் சமீபத்திய மாதங்களில் உறவுகளை வலுப்படுத்தி வருகின்றன.

டெஸ்லா மற்றும் சீனாவின் வாகன உற்பத்தியாளர்கள் அவர்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்கிறார்கள்.

எதிர்கால ஒத்துழைப்புக்கான பல்வேறு வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக ஹோண்டா மற்றும் நிசான் நிறுவனங்கள் தனித்தனி அறிக்கைகளில் தெரிவித்துள்ளன.

கூட்டு சேர்வது தொடர்பான தகவல் குறித்து பங்குதாரர்களுக்கு உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.