Singapore News in Tamil

வீடு வாங்குவோருக்கு இனி கவலையில்லை!

வீடு வாங்குவோருக்கு உதவ புதிய முறையை சிங்கப்பூர் உருவாக்கியுள்ளது. அதனை கட்டட, கட்டுமான ஆணையம் தெரிவித்தது. வீடு வாங்குவோருக்கு உதவும் புதிய குறியீட்டை முறையை அறிமுகப்படுத்த உள்ளது.

வீடு வாங்குவோர் கட்டுமான நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக தெரிந்து கொள்ள CONQUAS எனும் கட்டுமான தர மதிப்பீட்டின் புதிய குறியீட்டு முறை வழியமைக்கும்.

கடந்த 6 ஆண்டுகளில் முடிக்கப்பட்டுள்ள தனியார் வீட்டு திட்டங்களில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எப்படி செயல்பட்டுள்ளன என்பதைப் பற்றி வீடு வாங்குவோர் தெரிந்து கொள்ளலாம்.

தர மதிப்பீட்டு முறை 1989-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. கட்டுமான பணிகளின் தரநிலையைக் கட்டிகாப்பதற்கு அது பெரிதும் உதவி இருக்கிறது.

தரமாக வீடு கட்டிக் கொடுக்கும் நிறுவனங்களைப் பற்றி எளிதில் அடையாளம் காண்பதற்கு இந்த புதிய குறியீட்டு முறை உதவும்.