விடுமுறை கொண்டாட்டம்!! கொளுந்து விட்டு எரிந்த தீம் பார்க்!! அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிய உடல்கள்!!

விடுமுறை கொண்டாட்டம்!! கொளுந்து விட்டு எரிந்த தீம் பார்க்!! அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிய உடல்கள்!!

இந்தியாவின் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு சிலர் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் மே 25 அன்று மாலை TRP பொழுதுபோக்கு மற்றும் தீம் பார்க்கில் நடந்தது.

இந்த சம்பவத்தின் போது 300க்கும் மேற்பட்டோர் கோடை விடுமுறையை அனுபவித்து கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பூங்காவில் உள்ள தற்காலிக அமைப்பில் எரியக்கூடிய பொருட்கள் பயன்படுத்தப்பட்டதால் தீ வேகமாக பரவியது.

இந்த கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகே இருந்த தற்காலிக கட்டிடம் இடிந்து விழுந்தது. பலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

உயிர் பிழைத்தவர்களில் சிலர் அவர்கள் எதிர்கொண்ட இக்கட்டான சூழ்நிலையை பகிர்ந்தனர்.

சிலர் கதவுகளை உதைத்து ஜன்னல் வழியாக குதித்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டதாக கூறினர்.

பலியானவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் கருகி உள்ளதாகவும், உடல்களை எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்பு வரிசையாக வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்த போது தீ பற்றி கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இது மனிதனால் ஏற்பட்ட பெரும் அசம்பாவிதம் என்று உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து கூறியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளங்களில் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.