ஹென்டர்சன் ரோடு தீ விபத்தில், தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட NSF அதிகாரியான எட்வர்ட் எட்ச் கோ (19) விபத்து நடந்த குடியிருப்பில் தனித்து விடப்பட்டதே அவரின் மரணத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.அவரது மரணம் விசாரணை நடைபெற்று வந்தது.
மேலும் இந்த வழக்கில் , கோ – வை அந்த அடுக்குமடி குடியிருப்பில் விட்டுவிட்டு SCDF அதிகாரியான முஹம்மது கமில் மொஹமட் யாசின் (38) மட்டும் வெளியேறியதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த விசாரணையின் இறுதியில் முஹம்மது கமில் -இன் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு சிறை தண்டனையும் , அபராதமும் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
அத்தோடு எட்வர்ட் மரணத்திற்கு , ஆக்சிஜன் பற்றாக்குறையும் காரணம் என கூறப்படுகிறது. எனவே தீயணைப்பிற்கு தேவையான உதவி உபகரணங்களை சரிபார்க்க தவறிய மேலும் ஒரு SCDF அதிகாரியையும் விசாரிப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.