மும்பையை புரட்டி போட்ட கன மழை...!!! பள்ளிகளுக்கு தொடரும் விடுமுறை...!!
மும்பை: இந்தியாவின் மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழையால் நேற்று முன்தினம் வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
இதனால் அங்கு சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
மழையினால் ரயில் சேவையும் தாமதமானது.
இதனால் அங்குள்ள பள்ளிகளுக்கு நேற்று( செப்டம்பர் 26) விடுமுறை விடப்பட்டது.
மழைநீர் சாலையில் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஆன்லைனில் பகிரப்பட்ட ட்ரோன் காட்சிகள் நீரில் மூழ்கிய கார்களில் ஓட்டுநர்கள் இருப்பதும் சிலர் தங்கள் கார்களை வெள்ள நீரில் விட்டுச் செல்வதையும் காட்டியது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புனே பயணமும் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான பால்கர், தானே மற்றும் ராய்காட் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழை தொடர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும்( செப்டம்பர் 27)பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Follow us on : click here