பாரிஸில் பெய்த கனமழையால் செய்ன் ஆற்றின் தரம் பாதிப்பு!! நீச்சல் பயிற்சி ரத்து!!

பாரிஸில் பெய்த கனமழையால் செய்ன் ஆற்றின் தரம் பாதிப்பு!! நீச்சல் பயிற்சி ரத்து!!

பாரிஸில் ஒலிம்பிக் 2024 நடைபெற்று வருகிறது.நாளை(ஆகஸ்ட் 5) நடைபெறவிருக்கும் நீச்சல் போட்டிகளுக்கான நீச்சல் பயிற்சி இன்று(ஆகஸ்ட் 4) ரத்து செய்யப்பட்டது.

நீச்சல் வீரர்கள் தங்களது பயிற்சிகளை Seine ஆற்றில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அங்கு ஜூலை 31-ஆம் தேதி, ஆகஸ்ட் 1-ஆம் தேதிகளில் பெய்த கனமழையால் ஆற்றின் தரம் பாதிக்கப்பட்டதே இதற்கு காரணம்.

ஆற்றின் நீர் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் தரம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

எனினும், நாளைக்கான (ஆகஸ்ட் 5) போட்டிக்கு ஏற்றதாக இருக்காது என தெரிவிக்கப்பட்டது.

Seine ஆற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆண்களுக்கான நீச்சல் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.