மலேசியாவில் மீண்டும் தொடரும் கனமழை எச்சரிக்கை…!!!

மலேசியாவில் மீண்டும் தொடரும் கனமழை எச்சரிக்கை...!!!

மலேசியாவில் இரண்டாவது முறையாக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது நாளை (டிசம்பர் 11) வரை நீடிக்கும் என்பதால் மக்கள் அதற்கு தயாராகி வருகின்றனர்.

வானிலை ஆராய்ச்சியாளர்கள் கன மழைக்கான வானிலை முன்னறிவிப்பை விடுத்துள்ளனர்.

இதனால் மழைநீர் தேங்கும் அபாயமுள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து சுமார் 150,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பகாங், கிளந்தான், பெர்லிஸ், பேராக், தெரெங்கானு மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கனமழை எச்சரிக்கை காரணமாக மக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.