ஏழாவது நாளாக தெற்கு சீனாவில் வெளுத்து வாங்கும் கனமழை!

கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. அதனால் மக்கள் வீடுகளுக்குள்ளே தஞ்சமடைந்தனர்.

Guangxi நிலப்பரப்பில் உள்ள Bobai என்ற பகுதியில், தாழ்வான வீடுகளில் 2 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில், வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை படகுகளில் பாதுகாப்பாக மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Guangxi-ல் அடுத்த சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Haikui புயல், Fujian பகுதியில் கரையை கடந்த போதிலும் தெற்கு சீனாவில் தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

சீனாவை தாக்கும் சூறாவளி தீவிரமடைந்து வருவதாகவும், பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் இருக்கின்றது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்தனர்.