சிக்கிமில் இடை விடாமல் கொட்டி தீர்த்த கனமழை!! மீட்பு பணிக்கு இடையூறாக இருக்கும் வானிலை!!
சிக்கிம்: ஜூன் 12-ஆம் தேதி முதல் இடைவிடாது பெய்த கனமழையால் சிக்கிமில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதனால் பெரும்பாலான பகுதிகளில் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கித் தவித்த குறைந்தது 50 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டு மங்கன் நகருக்கு மாற்றப்பட்டதாக பிஆர்ஓ தெரிவித்துள்ளது.
இந்த நிலச்சரிவில் லாச்சுங் நகரில் சுமார் 1200 – 1500 சுற்றுலா பயணிகள் சிக்கித் தவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சங்க்லாங்கில் புதிதாக கட்டப்பட்ட தொங்கும் பாலம் இடிந்து விழுந்ததால் நிலைமை இன்னும் மோசமடைந்தது.
அது வடக்கு சிக்கிம் மற்றும் ஜோங்குவுடனான முக்கிய இணைப்பாக இருந்தது.
மேலும் வடக்கு சிக்கிமில் சிக்கித் தவிக்கும் சுற்றுலா பயணிகளை மீட்பு பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
முதலில் ஒன்பது சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டு மாங்கனுக்கு அழைத்து வரப்பட்டனர். அதன் பிறகு, 55 பேர் மீட்கப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Follow us on : click here