Singapore Breaking News in Tamil

ஜப்பானில் வெளுத்து வாங்கும் கனமழை!ஒருவர் பலி!

ஜப்பானில் கனமழை வெளுத்து வாங்குகிறது.கனமழையால் ஏற்கனவே சுமார் 2 மில்லியன் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.பலத்த கனமழையால் ஒருவர் உயிரிழந்தார்.

மற்றொருவரை காணவில்லை. கனமழையால் அடித்து செல்லப்பட்ட கார். காருடன் சடலமாக ஆற்றுக்குள் ஒருவர் மீட்கப்பட்டார்.

கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

நிலச்சரிவு ஏற்பட்ட வீட்டில் 70 வயதுடையவரைக் காணவில்லை. அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கனமழையால் மேற்கு, மத்திய,கிழக்கு ஜப்பான் பகுதிகளில் நிலநடுக்கம்,வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.