இலவங்கப்பட்டையை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..!!!

இலவங்கப்பட்டையை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..!!!

நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்துகின்ற மசாலாப் பொருட்களில் இலவங்க பட்டையும் ஒன்றாகும்.பிரியாணி மற்றும் அசைவ உணவுகளில் இலவங்கப்பட்டையின் பங்கு முக்கியமானது. அதேபோல, நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும் இலவங்கப்பட்டை முக்கியப் பங்கு வகிக்கிறது.
நறுமணமுள்ள இந்த மூலிகை பொருளில் எக்கச்சக்க நன்மைகள் நிறைந்துள்ளன.

இலவங்கப்பட்டையில் உள்ள சத்துக்கள்:

✨️இரும்பு
✨️ மாங்கனீசு
✨️கால்சியம்
✨️மக்னீசியம்
✨️ ஜிங்க்
✨️பொட்டாசியம்
✨️ ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்

இலவங்கப்பட்டை பானத்தின் நன்மைகள்:

ஒரு கிளாஸ் தண்ணீரில் இலவங்கப்பட்டையை ஊறவைத்து குடிப்பதால் உடலில் எக்கச்சக்க நன்மைகள் ஏற்படுகின்றன.

அவை பின்வருமாறு:

👉 இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க இலவங்ப்பட்டை தண்ணீர் உதவுகிறது.

👉 இலவங்கப்பட்டை தண்ணீரை குடிப்பதன் மூலம் செரிமான பிரச்சனைகள் சரியாகும்.

👉 உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

👉 மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியை குறைக்க உதவுகிறது

👉 பல்வலி ஏற்பட்டால் இலவங்கப்பட்டை நீரில் வாய் கொப்பளிக்கலாம்.

👉 இதய நோய் அபாயத்தைக் குறைக்க இலவங்கப்பட்டை தண்ணீரைக் குடிக்கலாம்.

👉 உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இலவங்கப்பட்டை நீரை அருந்தலாம்.


👉 உடலில் உள்ள தேவையற்ற நச்சுக் கழிவுகளை நீக்க இலவங்கப்பட்டை தண்ணீரைக் குடிக்கலாம்.

👉 இலவங்கப்பட்டை பொடியை சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

👉 தினமும் ஒரு டம்ளர் இலவங்கப்பட்டை தண்ணீர் குடிப்பதால் வயிற்று ஆரோக்கியம் மேம்படும்.

👉 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இலவங்கப்பட்டையை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.