Latest Singapore News

சிங்கப்பூரில் HBD வீடுகளின் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் ஒரு மடங்கு உயரக்கூடும்… அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!

இன்ஸ்டிடியூட் ஆஃப் பாலிசி ஸ்டடீஸின் 35வது ஆண்டு விழா மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் திருமதி சிம், வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் (HDB) கடந்த 2021 ஆம் ஆண்டில் 800 யூனிட்களில் இருந்து 2023 ஆம் ஆண்டில் 1,800 யூனிட்டுகளாக தனது எண்ணிக்கையை உயர்த்தியது என்று பெருமிதம் கொண்டார்.

பேரண்ட்ஹுட் ப்ரோவிஷனல் ஹவுசிங் திட்டத்தின் (பிபிஹெச்எஸ்) கீழ் அடுக்குமாடி குடியிருப்புகளின் விநியோகத்தை அதிகரிக்கும் இலக்கை அடைந்தாலும் இந்த எண்ணிக்கையானது அடுத்த இரு ஆண்டுகளில் இன்னும் ஒரு மடங்கு அதிகரித்து 4000 வீடுகள் என்ற இலக்கை அடையும் என்று மகிழ்ச்சி செய்தியினை பகிர்ந்து கொண்டார்.

குடும்பங்கள் தற்காலிகமாக தங்குவதற்கு மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்படும் என்றும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் விநியோகம் 4,000 யூனிட்களாக இரட்டிப்பாகும் என்றும் தேசிய வளர்ச்சிக்கான மூத்த இணை அமைச்சர் சிம் ஆன் திங்கள்கிழமை (ஜூன் 12) அறிவித்தார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் திட்டத்தின் கீழ் மொத்தமாக 2,000 குடியிருப்புகள் இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார். புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமான பணி முடியும் வரை, குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுடன் தங்குவதற்கு இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

பிபிஹெச்எஸ் விண்ணப்ப விகிதங்கள் 2021ல் 20 முறையிலிருந்து இப்போது மூன்று மடங்கு வரை “கணிசமான அளவு குறைந்துள்ளது” என்றும் திருமதி சிம் கூறினார்.

கொரோனா தொற்று காரணமாக புதிய பிளாட் டாட் வாங்க முன்பதிவு செய்பவர்கள் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரை காத்திருக்கும் நிலைமை தற்பொழுது ஏற்பட்டுள்ளது. எனவே, பிபிஹெச்எஸ் விநியோகத்தை மேலும் அதிகரிக்க HDB கடினமாக உழைக்கிறது, அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதை மீண்டும் 4,000 யூனிட்களாக உயர்த்துகிறது,” என்று திருமதி சிம் மேலும் கூறினார்.

இந்த முயற்சிகள் இளம் குடும்பங்களுக்கு ஓரளவு நிம்மதியைக் கொண்டுவரும் என்றும் அவர்களின் குடும்பத்திற்கு இது ஒரு நல்ல செய்தியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம் என்றும் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் மற்றும் நம் நாடுகளில் இருந்து அங்கு தங்கி இருக்கும் வெளிநாட்டு குடும்பங்களும் வீடு கிடைக்காமல் ஒரே வீட்டினை இரண்டு மூன்று குடும்பங்கள் பகிர்ந்து தங்கி இருக்கின்றன என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே.

வீட்டு வாடகையும் சிங்கப்பூரில் அதிகம் என்பதால் பெரும்பாலான மக்கள் ஷேரிங் முறையிலேயே வசித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் அறிவித்திருக்கும் இந்த அறிவிப்பு HBD பிளாட்டுகளை வாங்க காத்திருக்கும் மக்களுக்கு நிச்சயம் ஒரு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.