சிங்கப்பூருக்கு செல்ல டெஸ்ட் சென்டர் ஓபன் பண்ணீட்டாங்களா?

சிங்கப்பூருக்கு செல்ல டெஸ்ட் சென்டர் ஓபன் பண்ணீட்டாங்களா?

நோய் பரவல் காலகட்டத்திற்கு முன் சிங்கப்பூருக்கு செல்ல டெஸ்ட் அடித்து செல்வது மிகச் சிறந்த வழியாக இருந்தது.
நோய் பரவல் முடிந்த பிறகு, டெஸ்ட் அடித்த பலர் சிங்கப்பூர் செல்ல முடியாத காரணத்தால் Quota எண்ணிக்கை குறைந்தது.

இந்நிலையில் டெஸ்ட் அடிப்பதற்காக பலர் கட்டணத்தைக் கட்டிவிட்டு Quota- க்காக காத்திருக்கின்றனர்.

ஒருசிலர் Spass, Epass, PCM permit, shipyard permit மூலம் சிங்கப்பூருக்கு செல்ல தொடங்கிவிட்டனர்.

இதற்கிடையே டெஸ்ட் சென்டர் எப்போது திறப்பார்கள் என்று பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
இப்போதும் ஒரு சில டெஸ்ட் சென்டர்களில் அதன் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் வருகிறது.

மிகவும் குறைவான நபர்கள் மட்டுமே Main Test க்கு செல்கின்றனர். பணம் கட்டிவிட்டு டெஸ்ட் சென்டர்களில் 8 முதல் 10 மாதங்கள் வரை காத்திருக்கின்றனர்.இந்த சூழ்நிலை தொடர்ந்து கொண்டுதான் வருகிறது.

ஒரு சில டெஸ்ட் சென்டர்கள் மூடப்பட்டுள்ளது. நீங்கள் டெஸ்ட் அடித்து சிங்கப்பூருக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் டெஸ்ட் சென்டர்களில் அட்மிஷன் போடலாம்.