கடந்த வாரம் சிங்கப்பூர் நாணய வாரியத்தின் இயக்குநர் ரவி மேனன் அடிப்படைப் பணவீக்கம் உச்சத்தைத் தொட்டுவிட்டது என்று கூறியிருந்தார்.இனி, அது குறையக்கூடும் என்றார்.
கடந்த மாத அடிப்படைப் பணவீக்க விழுக்காட்டைச் சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஐந்து விழுக்காடு அதிகரித்திருக்கிறது.
கடந்த ஆண்டுடன் பிப்ரவரி மாதத்தை ஒப்பிட்டால் அது 5.5 விழுக்காடு கூடி உள்ளது.சிங்கப்பூரில் விலைவாசி மீது அழுத்தம் இருந்தது.பண வீக்கத்தின் விழுக்காடு உயர்ந்துள்ளதால் விலைவாசி மீது இருந்த அழுத்தம் குறைகிறது.
உணவு, எரிபொருள் தொடர்பான செலவு அதிகம் உயரவில்லை.
இவ்வாண்டு இறுதியில் பணவீக்கம் 2.5 விழுக்காடு இருக்கும் என்றார்.
இருந்தாலும்,வாழ்க்கைச் செலவு நெருக்கடியில் இருந்து மீண்டு வந்துவிட்டோம் என சொல்வதற்கு இன்னும் நேரம் வரவில்லை என குறிப்பிட்டார்.