சிங்கப்பூர் சில வாரங்களில் கிருமித் தொற்று சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
தொற்று எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களை வாரத்துக்கு 10,000 சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
நோய் தொற்று எண்ணிக்கை வாரத்துக்கு சுமார் 4,500 ஆக அதற்கு முன்பே இரண்டு வாரங்களில் பதிவாகி இருந்தது.
சுகாதார பராமரிப்பு துறை தற்போது சிங்கப்பூரில் அதிகரிக்கும் கிருமி தொற்று சம்பவங்களால் நெருக்கடியை எதிர்கொள்ளவில்லை என சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
அவ்வப்போது நோய் தொற்று சம்பவங்கள் உயர்ந்து வரும் நிலையை என்றும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என அமைச்சகம் CNA – விடம் கூறியது.
கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்வோரின் எண்ணிக்கை மிகக் குறைவு என்று சுகாதார அமைச்சர் Ong ye kung கூறினார்.
கோவிட் -19 நோய் தொற்றை நிரந்தர நோயாக கருதலாம் என்றும் கூறினார்.
இந்தியாவில் ஓமக்ரான் வகைக் கிருமியிலிருந்து உருமாறிய XBB.1.16 கிருமி அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.
மார்ச் 26-ஆம் தேதி நிலவரப்படி சிங்கப்பூரில் XBB.1.16 கிருமி தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை.
இதனை அமைச்சகம் உறுதி செய்தது.