மெய்லிங் ஸ்ட்ரீட்டில் உருவாக்கப்பட்டுள்ள”Happy Village @ Meiling” சமூகம்..!!

மெய்லிங் ஸ்ட்ரீட்டில் உருவாக்கப்பட்டுள்ள "Happy Village @ Meiling" சமூகம்..!!

சிங்கப்பூர்:மெய்லிங் ஸ்ட்ரீட்டில் ஒரு புதிய சமூக இடம் உருவாக்கப்பட்டுள்ளது.

மெயிலிங் ஸ்ட்ரீட்டின் பிளாக் 160 இல் அமைந்துள்ள இந்த இடம் ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குகிறது.

Happy Village @ Meiling  என்று அழைக்கப்படும் இந்த இடம், குடியிருப்பாளர்கள் சமூகத்தில் சுறுசுறுப்பான, நிறைவான வாழ்க்கையை வாழ உதவும்.

அங்கு குடியிருப்பாளர்கள் சுகாதார ஆலோசனை மற்றும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புதிய இடம் மூத்த குடிமக்களை சுறுசுறுப்பாக இருக்க ஊக்குவிக்கிறது.

முதியவர்கள் பல்வேறு உடற்பயிற்சிகள் செய்வதிலிருந்து நாள்பட்ட நோய்களை நிர்வகிப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு சமூகம் உதவியாக உள்ளது.

அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் ஏற்கனவே இந்த முன்னோடித் திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், குவீன்ஸ்டவுன் குடியிருப்பாளர்களில் 75 சதவீதம் பேர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து ஆதரவைப் பெறுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.