உலகின் மிக மோசமாக மாசடைந்த நகரமாக மாறியுள்ள ஹனோய்!!

உலகின் மிக மோசமாக மாசடைந்த நகரமாக மாறியுள்ள ஹனோய்!!

உலகிலேயே ஹனோய் நகரம் மிகவும் மோசமாக மாசடைந்துள்ளது.

வியட்நாம் தலைநகர் ஹனோயில் கடந்த சில வாரங்களாகவே புகை மூட்டமாகி சுற்றுப்புறம் மிகவும் மோசமாகியுள்ளது.

வாகனங்களின் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மற்றும் குப்பைகளை எரிப்பதால் புகை மூட்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

சுகாதாரத்தை அதிகம் பாதிக்கும் சிறிய PM2.5 என்று அழைக்கப்படுகின்றன.

Airvisual எனும் தூய்மைக் கேட்டு தகவல் தளம் அந்த நகரில் ஒரு கனமீட்டருக்கு 266 மைக்ரோகிராம் துகள்கள் இருப்பதாக கூறியது.

இந்த நிலையில் வியட்நாமில் குடியிருக்கும் மக்கள் அனைவரும் மின்சார வாகனங்களை பயன்படுத்த வைப்பதற்கான முயற்சியை எடுக்க வேண்டும் என்று வியட்நாமின் போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக் கொண்டது.