மாற்றுத்திறனாளிகளுக்கு கை கொடுக்கும் சக்கர நாற்காலி திட்டம்…!!

மாற்றுத்திறனாளிகளுக்கு கை கொடுக்கும் சக்கர நாற்காலி திட்டம்...!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மாற்றுத் திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு பொதுப் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ஏறக்குறைய 1,700 பொதுப் பேருந்துகளில் சக்கர நாற்காலி பலகைகள் பொருத்தப்பட்டுள்ளதாக சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது போன்ற வசதிகளால் அவர்கள் பேருந்துகளில் பயணிப்பது எளிதாகும் என்று நம்பப்படுகிறது.

மேலும் அவர்களுக்கு பேருந்துகளில் கூடுதல் முன்னுரிமை இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் உள்ள அனைத்து பொது பேருந்துகள் மற்றும் ரயில்கள் சக்கர நாற்காலியில் செல்லக்கூடியவை என்று அமைச்சகம் குறிப்பிட்டது.

1,000க்கும் மேற்பட்ட பாதசாரிகள் கடக்கும் இடங்களில் கிரீன் மேன் பிளஸ் என்ற சிக்னல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த சிக்னல் மாற்றுத்திறனாளிகள் சாலையை கடக்க கூடுதல் நேரம் ஒதுக்குகின்றது.

இது போன்ற சிக்னல் விளக்குகளால் பாதசாரிகள் மட்டுமின்றி குறிப்பாக மாற்றுத்திறனாளிகளும் பயனடைந்தனர்.

அடுத்த மூன்று ஆண்டுகளில், மேலும் 1,500 பாதசாரிகள் கடக்கும் இடங்களில் கிரீன் மேன் பிளஸ் சிக்னல் விளக்குகள் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here ⬇️